சில மாவட்டங்களில் 4 நாட்கள் மழைக்கு வாய்ப்பு

சில மாவட்டங்களில் 4 நாட்கள் மழைக்கு வாய்ப்பு
Updated on
1 min read

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு ஒருசில மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தில் 29, 30-ம் தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி ஆகிய மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், 31, ஆக.1 ஆகிய தேதிகளில் கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும்காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். சென்னையில் பொதுவாக வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in