Published : 15 Feb 2016 10:40 AM
Last Updated : 15 Feb 2016 10:40 AM

காதலர் தின கொண்டாட்டம்: கடற்கரை, பல்வேறு பூங்காக்களில் குவிந்த காதல் ஜோடிகள் - இந்து அமைப்புகள் போராட்டம்

காதலர் தினத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரை, பூங்காக்களில் காதலர்கள் குவிந்தனர். அவர்கள் ஒருவருக் கொருவர் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டு, பரிசுகளும் வழங்கினர்.

அதே நேரத்தில் காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்புகள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

உலகம் முழுவதும் பிப்.14-ம் தேதி காதலர் தினமாக கொண் டாடப் படுகிறது. ஒருவருக்கொரு வர் அன்பை வெளிப்படுத்தும் வகையில் இந்த தினம் கொண் டாடப்படுகிறது. சென்னையிலும் காதலர் தின கொண்டாட்டம் களை கட்டியது. மெரினா கடற்கரையில் காலையிலேயே ஏராளமான காதலர்கள் திரண்டிருந்தனர். ஒருவருக்கொருவர் வாழ்த்து களை பரிமாறிக் கொண்டதுடன் பரிசுப் பொருட்களும் வழங்கினர். சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் கடற்கரை மணலில் ஆங்காங்கே ஜோடி ஜோடியாக காதலர்கள் அமர்ந்திருந்ததை காண முடிந்தது.

காதல் ஜோடிகள் அத்துமீறக் கூடாது என்று போலீஸார் எச்சரித்து இருந்தனர். அத்துமீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில், கடற்கரையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ரோந்துப் பணியிலும் போலீஸார் ஈடுபட்டிருந்தனர்.

கிண்டி சிறுவர் பூங்கா, காந்தி மண்டபம், அண்ணாநகர் டவர் பூங்கா, மாநகராட்சி பூங்காக்கள், பொழுதுபோக்கு மையங்கள், ஷாப்பிங் மால்கள், தியேட்டர்களிலும் காதலர்கள் குவிந்திருந்தனர்.

இதற்கிடையே, காதலர் தின கொண்டாட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மெரினா கடற்கரையில் பாரத் இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி ஆகிய அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. நாய்களை முத்தமிட வைப்பது, நாய்களுக்கு மாலை அணிவித்து திருமணம் செய்வது போன்ற போராட்டங்களை நடத்தினர். இந்து மக்கள் கட்சி சார்பில் கண்ணகி சிலைக்கு வழிபாடு செய்யும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

சென்னை கொருக்குப்பேட்டை யில் இந்து முன்னணியினர் ஆண் நாய்க்கும், பெண் ஆட்டுக்கும் திருமணம் செய்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு சார்பில் காதலர் தின கொண்டாட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

ஜனநாயக வாலிபர் சங்கத் தினர், காதலர் தினத்துக்கு ஆதரவு தெரிவித்து காதல் ஜோடிகளுக்கு பூக்களை கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். ரத்ததான முகாம், குழந்தைகளுக்கு ஓவியப் போட்டிகளையும் நடத்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x