Published : 29 Jul 2021 03:14 AM
Last Updated : 29 Jul 2021 03:14 AM

இன்று சர்வதேச புலிகள் தினம்: காடுகளை காப்பதில் முக்கியத்துவம் பெறும் புலிகள்

மதுரை

சர்வதேச புலிகள் தினமான இன்று (ஜூலை 29) உலக அளவில் புலிகள் பாதுகாப்பு மற்றும் அவற் றை அழிவில் இருந்து காக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந் துள்ளது.

காடுகளின் காவலன் புலிகள் என்பதால் நாட்டின் தேசிய விலங்காக புலி அறிவிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. 5 ஆண்டுகளுக்கு முன்பு அழிவின் விளிம்பில் இருந்த புலிகளின் எண்ணிக்கை அண்மையில் கணிச மாக உயர்ந்துள்ளது.

புலிகள் குறித்த தனது அனு பவத்தை பகிர்ந்து கொள்கிறார் வன விலங்குகள் ஆர்வலரும் வனவிலங்கு புகைப்படக் காரருமான ஜி.மோகன்குமார் (72). “நாட்டின் அனைத்து வனப் பகுதிகளுக்கும் சென்று விலங்குகள், பறவைகளைப் புகைப்படம் எடுத்துள்ளேன். புலியை புகைப்படம் எடுக்கும் அனுபவமே தனி” என்றார்.

மேலும் அவர் கூறும்போது ’5 ஆண்டுகளுக்கு முன்பு புலிகளின் எண்ணிக்கை மிகக் குறைந்து வந்தது. ஆனால், வேட்டைத் தடுப்பு, வனப் பாதுகாப்பு, புலிகள் சர ணாலயம் போன்ற அரசின் நடவடி க்கைகளால் இன்று புலிகள் பாதுகாக்கப்பட்டு அவற்றின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளன. நம் நாட்டில் 51 புலிகள் சரணாலயங்கள் உள் ளன. மத்தியப் பிரதேசத்தில் 526 புலிகளும், கர்நாடகத்தில் 524 புலிகளும் அதற்கு அடுத்ததாக தமிழகத்தில் தற்போது 229 புலிகளும் வசிக்கின்றன. புலி களைக் காப்பதன் மூலம் வனத்தை பாதுகாக்க முடியும். அது பல்லுயிர் பெருக்கத்துக்கு வித்தாக அமையும். எனவே, புலிகள் மீதான பாதுகாப்பு மேலும் அதிகப்படுத்தப்பட வேண்டும் என்றும் மோகன்குமார் குறிப் பிட்டார்.

இதுகுறித்து மதுரையை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் ரவீந்திரன் நடராஜன் கூறுகையில், ‘‘காடுகளின் சமநி லை கெடுதலை தவிர்க்கவே "ப்ராஜெக்ட் டைகர் " என்னும் திட்டம் 1973-ம் ஆண்டு மறைந்த பிரதமர் இந்திராகாந்தியால் ஏப்ரல் 1-ம் தேதி ஜிம் கார்பட் தேசிய பூங்காவில் தொடங்கப்பட்டது. அதன் பின் புலிகள் வாழும் தகுதிகள் உள்ள காடுகள் ஒவ்வொன்றும் அடையாளம் காணப்பட்டு அவைகள் புலி களின் சரணாலயங்களாக அறிவிக் கப்பட்டு உச்ச வனச் சட்டங்களால் பாதுகாப்புக்குள் கொண்டு வரப் பட்டன.

புலிகள் காக்கப்படும் போது மறைமுகமாக நமது உன்னத காட்டு வளமும் பாதுகாக்கப்படுகிறது என்பதை உணர வேண்டும். புலிகளை போன்ற பேருயிர் களுக்கான உன்னதத்தை மனி தன் உணர்ந்து நடந்து கொள்ள பழகினால் புலிகளின் வாழ்வு சிறப்படைவதோடு, இயற்கை மேம்பட்டு மனிதர்களின் வாழ்க்கையும் ஆரோக்கியம் நிறைந்ததாக இருக்கும்,’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x