

வரும் பிப்ரவரி 22 முதல் 27-ம் தேதி வரை திமுக வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான நேர்காணல் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக நேற்று வெளி யிட்ட அறிக்கையில் அவர் கூறியி ருப்பதாவது: திமுக சார்பில் போட்டி யிட விருப்பம் தெரிவித்து விண்ணப் பித்தவர்களிடம் வரும் 22-ம் தேதி காலை 9 மணி முதல் மாவட்ட வாரி யாக திமுக தலைவர் கருணாநிதி நேர்காணல் நடத்த இருக்கிறார். தொகுதி நிலவரம், வெற்றி வாய்ப் புகள் குறித்தும் ஆராய்ந்து அறிந்து கொள்வார்.
நேர்காணலின்போது குறிப் பிட்ட தேதிகளில் சம்பந்தப் பட்ட மாவட்டச் செயலாளர் மட்டும் வர வேண்டும். மாவட்ட நிர்வாகி கள், ஒன்றிய, நகர, பகுதிச் செய லாளர்கள் வர வேண்டியதில்லை.
மாவட்ட வாரியாக நேர்காணல் நடைபெறும் விவரங்கள்:
பிப்ரவரி 22-ம் தேதி காலை 9 மணிக்கு கன்னியாகுமரி, திரு நெல்வேலி, தூத்துக்குடி, ராமநாத புரம். மாலை 4 மணிக்கு விருது நகர், தேனி, திண்டுக்கல்.
23-ம் தேதி காலை 9 மணிக்கு சிவகங்கை, மதுரை புறநகர், மதுரை மாநகர், ஈரோடு. மாலை 4 மணிக்கு நீலகிரி, கோவை, கோவை மாநகர், சேலம், திருப் பூர்.
24-ம் தேதி காலை 9 மணிக்கு புதுக்கோட்டை, நாமக்கல், திருச்சி. மாலை 4 மணிக்கு கரூர், பெரம்பலூர், அரியலூர்.
25-ம் தேதி காலை 9 மணிக்கு நாகை, திருவாரூர், தஞ்சாவூர், கடலூர், மாலை 4 மணிக்கு விழுப் புரம், கிருஷ்ணகிரி, தருமபுரி.
26-ம் தேதி காலை 9 மணிக்கு திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம், மாலை 4 மணிக்கு திருவள்ளூர், சென்னை.
27-ம் தேதி காலை 9 மணிக்கு புதுச்சேரி, காரைக்கால் ஆகிய மாவட்டங்களுக்கான நேர்காணல் நடைபெறும். இவ்வாறு க.அன்பழ கன் தெரிவித்துள்ளார்.