தமிழக காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளராக சசிகாந்த் செந்தில் நியமனம்

தமிழக காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளராக சசிகாந்த் செந்தில் நியமனம்
Updated on
1 min read

தமிழக காங்கிரஸ் ஒருங்கிணைப்பாள ராக, விருப்ப ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் நியமிக்கப் பட்டுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்ட அறிவிப்பில், ‘அகில இந்தியகாங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் ஒப்புதலோடு,தமிழக காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளராக, விருப்ப ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் நியமிக்கப்பட்டுள்ளார்’ என்று தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்தசசிகாந்த் செந்தில், கடந்த 2009-ல்குடிமைப் பணி தேர்வில் வெற்றி பெற்றுகர்நாடகாவில் ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றினார். பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு மத்திய பாஜக அரசை விமர்சித்து வந்தார். பாஜக அரசுவெறுப்பு அரசியலை மையப்படுத்தி இயங்குவதாகக் கூறி கடந்த 2019 செப்டம்பர் 6-ம் தேதி ஐஏஎஸ் பதவியைராஜினாமா செய்தார். தொடர்ந்து, பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று வந்தார். கடந்த ஆண்டு நவம்பர்9-ம் தேதி காங்கிரஸில் இணைந்தார்.

கடந்த ஏப்ரலில் நடந்த பேரவைத்தேர்தலின்போது ராகுல் காந்தியின் தமிழக சுற்றுப் பயணம், தமிழக காங்கிரஸ் தேர்தல் ஒருங்கிணைப்பு பணிகள், பிரச்சார உத்திகள் வகுக்கும்பணியில் அவர் ஈடுபட்டிருந்ததுகுறிப்பிடத்தக்கது.

கட்சி நிர்வாகிகளுக்கு பயிற்சிமுகாம் நடத்துவது, சமூக ஊடகங்களில் காங்கிரஸ் கொள்கைகளை பிரச்சாரம் செய்வது, இளைஞர் அணி,மகளிர் அணி போன்ற துணை அமைப்புகளுக்கு வழிகாட்டுவது போன்ற பணிகளில் சசிகாந்த் செந்தில் ஈடுபடுவார்என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in