Published : 28 Jul 2021 03:15 am

Updated : 28 Jul 2021 08:16 am

 

Published : 28 Jul 2021 03:15 AM
Last Updated : 28 Jul 2021 08:16 AM

மணிக்கு 30 கி.மீ. வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டும்; கோவையில் வாகனங்களின் வேக வரம்பு குறைப்பு: மீறினால் அபராதம் விதிக்கப்படும் என காவல்துறையினர் எச்சரிக்கை

vehicles-speed-limit
வைசியாள் வீதியில் நேற்று திருத்தியமைக்கப்பட்ட வேக அளவு பலகையை பொருத்தும் போக்குவரத்து காவல்துறையினர். படம்: ஜெ.மனோகரன்

கோவை

கோவையில் உள்ள சாலைகளில், வாகனங்களின் நிர்ணயிக்கப்பட்ட வேக கட்டுப்பாட்டு அளவுகள் மாற்றப்பட்டுள்ளன. வேக அளவுகளை மீறினால், தொடர்புடைய வாகனஓட்டுநர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கோவையில் பெருகிவரும் வாகனங்களின் எண்ணிக்கை, இதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல், விபத்துகள், உயிரிழப்புகளை தடுக்க காவல்துறையினர் பல்வேறுநடவடிக்கைகளை எடுத்துவரு கின்றனர். இந்நிலையில், ஆட்சியர்ஜி.எஸ்.சமீரன் உத்தரவின் பேரில், மாவட்டத்தில் உள்ள பல்வேறு சாலைகளில் இருசக்கர வாகனம் உட்பட அனைத்து வாகனங் களின் வேக கட்டுப்பாட்டு அளவுகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.


அதன்படி, கோவை மாநகரில் காந்திபுரம் முதல் கணபதி வரையிலும், நூறடி சாலை, கிராஸ்கட் சாலை, பாரதியார் சாலை, சுக்கிரவார்பேட்டை முதல் அவிநாசி சாலை மேம்பாலம் வரையிலும், வைசியாள் வீதி முதல் செல்வபுரம் வரையிலும் வாகனங்களை மணிக்கு 30 கிலோ மீட்டர் வேகத்தி லும், மீதமுள்ள பகுதிகளில் மணிக்கு40 கிலோ மீட்டர் வேகத்திலும் மட்டுமே இயக்க உத்தரவிடப் பட்டுள்ளது.

மாவட்ட காவல் எல்லைக்குட் பட்ட சோமையனூர் - தண்ணீர் பந்தல் சாலை, டிவிஎஸ் நகர் - கணுவாய் சாலை, ராக்கிபாளையம் பிரிவு முதல் தொப்பம்பட்டி பிரிவு,மத்தம்பாளையம் கோட்டைப் பிரிவு, காரமடை டீச்சர்ஸ் காலனி,காந்தி நகர், குட்டையூர், தென்திருப்பதி நால் ரோடு, ஆலாங்கொம்பு - புங்கம்பாளையம் சாலை உள்ளிட்ட இடங்களில் மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லஅறிவுறுத்தப்பட்டுள்ளது.

கிணத்துக்கடவு தாமரைக்குளம் பாலம் முதல் பதி சாலை,கோயில்பாளையம் முதல் சேரன் நகர், பாலத்துறை ஜங்ஷன் முதல் எல் அன்ட் டி பைபாஸ் சாலை ஆகிய இடங்களில் 30 கிலோ மீட்டர்வேகத்தில் வாகனங்களை இயக்க வேண்டும்.

மாநகர போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘மாநகரில் ஏற்கெனவே 50 மற்றும்40 கிலோமீட்டராக இருந்த வேகஅளவுகள் முறையே 40 மற்றும் 30கிலோ மீட்டராக மாற்றப் பட்டுள்ளன. இது தொடர்பான, அறிவிப்புபலகை பொருத்தும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நடை முறை இன்று முதல் அமலுக்கு வருகிறது. இந்த வேக அளவுகளை தாண்டி வாகனங்களை இயக்கும் வாகன ஓட்டுநர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்’’ என்றனர்.


வாகனங்களின் வேக வரம்பு குறைப்புகாவல்துறையினர் எச்சரிக்கைஅபராதம்கோவைVehicles speed limit

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x