Published : 28 Jul 2021 03:17 AM
Last Updated : 28 Jul 2021 03:17 AM

கரோனா போன்ற பேரிடர் தொற்று காலத்தில் நோயாளி அருகே செல்லாமல் சிகிச்சையளிக்க சாதனம்

கரோனா போன்ற பேரிடர் தொற்றுக் காலத்தில் மருத்துவர் நோயாளி அருகே செல்லாமல் தொலைவிலிருந்தே 24 மணி நேரமும் கண்காணித்து சிகிச்சை வழங்க `அனிட்ரா ரிமோட் கண்ட்ரோல்' என்ற சாதனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கரோனா போன்ற பேரிடர் காலத்தில் மருத்துவர்கள், நோயா ளிகளுக்கு அருகே சென்று அவர்களைக் கண்காணித்து சிகிச்சை வழங்குவது சவாலாக உள்ளது. நோயாளிகளுக்குச் சிகிச்சையைத் தொடர்வதற்கு முன் தொற்றுநோய் பரிசோதனை செய்து அதன் முடிவு `நெகட்டிவ்' என வந்தால்தான் அருகில் சென்று சிகிச்சை வழங்க முடி கிறது. அதனால், நோயாளிக ளுக்குச் சிகிச்சை வழங்குவது தாமதமாகிறது.

ரிமோட் சாதனம்

இதற்குத் தீர்வுகாணும் வகை யில் நோயாளியின் அருகே செல்லாமல் தொலைவிலிருந்தே 24 மணி நேரமும் கண்காணித்து சிகிச் சை வழங்க `அனிட்ரா ரிமோட் கண்ட்ரோல்'(Anidra) என்ற சாதனம் மதுரையில் அறி முகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தச் சாதனம் கரோனா போன்ற தொற்று காலத்தில் நோயாளிகளுக்குத் தாமதமின்றி சிகிச்சை வழங்க மருத்துவர் களுக்குப் பெரும் உதவியாக இருக்கிறது.

இதுகுறித்து மதுரையைச் சேர்ந்த மூத்த இதய நோய் நிபுணர் ஆர்.சிவக்குமார் கூறியதாவது:

பேரிடர் காலம் மட்டுமின்றி மருத்துவர்கள் எந்த இடத்தில் இருந்தாலும் இந்தச் சாதனம் மூலம் நோயாளியைக் கண் காணித்து அவர்களுக்குத் தேவை யான சிகிச்சைகளை வழங் கலாம். பெரிய மொபைல் போன் வடிவில் காணப்படும் இந்தச் சாதனம் நோயாளியின் உடலில் பொருத்தப்படும்.

மொபைல் செயலி

இந்தச் சாதனத்துடன் டேப் இணைக்கப்பட்டு மருத்துவரின் மொபைல் போனில் உள்ள இதற் கான பயன்பாட்டு செயலியுடன் இணைக்கப்படும்.

மருத்துவர்கள், நோயாளியின் இதயத்துடிப்பு, ஆக்சிஜன் அளவு, ரத்த அழுத்தம் உள்ளிட்ட ஒவ் வொரு மருத்துவ விவரங்க ளையும் கண்காணித்து எளிதாகச் சிகிச்சையளிக்க முடியும் என்றார்.

இந்த சாதனத்தை விநியோகம் செய்யும் அனித்ரா நிறுவனத்தின் முதுநிலை மேலாளர் பீர் முகமது, விற்பனைப் பிரதிநிதி கார்த்தி ஆகி யோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x