Published : 28 Jul 2021 03:17 AM
Last Updated : 28 Jul 2021 03:17 AM

ஜெயலலிதா, எம்ஜிஆர் பெயர் புறக்கணிப்பால் அதிமுகவை மறந்த தமிழக மக்கள் : நிர்வாகிகள் மீது முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா குற்றச்சாட்டு

அன்வர் ராஜா

பரமக்குடி

கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் ஜெயலலிதா, எம்ஜிஆர் பெயரை நிர்வாகிகள் சொல்ல மறந்ததால் மக்கள் அதிமுகவை மறந்து விட்டனர் என முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா பேசினார்.

ராமநாதபுரம் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பரமக்குடியில் நடைபெற்றது. இதில் அவர் பேசியதாவது:

தேர்தல் நேரத்தில் ஜெயலலிதா, எம்ஜிஆர் பெயரை நிர்வாகிகள் சொல்கிறார்களா?, அவர்களது படத்தை பயன்படுத்துகின்றனரா? எனப் பொதுமக்கள் பார்ப்பர். இத்தேர்தலில் அதைச் சொல்ல மறந்ததால் மக்கள் அதிமுகவை மறந்துவிட்டனர். ஆனாலும் இத் தேர்தலில் 75 இடங்களில் அதிமுக வெற்றி பெற்றது.

ஜெயலலிதா இருந்தபோதும் நாம் தோற்றுள்ளோம். ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது 65 இடங்களில் வெற்றிபெற்று எதிர்க்கட்சியாக இருந்தோம். ஜெயலலிதா சிறைக்குச் சென்ற போது 200 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

ஜெயலலிதா இருந்து இத்தேர்தலில் 70 இடங்களில் மட்டும் வெற்றி பெற்று முதல்வர் பதவியை இழந்திருந்தால் 300-க்கும் மேற்பட்ட கட்சியினர் தற்கொலை செய்திருப்பர். ஆனால் இத்தேர்தலில் தோல்வியுற்று ஆட்சிக்கு வர முடியவில்லை. இதுகுறித்து யாரும் வருத்தப்பட வில்லை. இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் அவர் செய்தியாளர் களிடம் கூறியதாவது:

லஞ்ச ஒழிப்பு சோதனை நடத்தி அதிமுகவை முடக்க திமுக அரசு நினைக்கிறது. அவர்கள் எத்தனை பேர் மீது சோதனை நடத்தினாலும், அதை நீதிமன்றம் மூலம் சந்திப்போம். திமுக ஆட்சிக் காலத்தில் ஜெயலலிதா மீது 12 வழக்குகள் போடப்பட்டன. அவர் உயிரோடு இருக்கும் வரை நிரபராதி. திமுகவிலும் மு.கருணாநிதி இருக்கும்போதே இரட்டை தலைமை இருந்தது. அன்பழகன், கருணாநிதி கையெழுத்திட்டால் தான் உதயசூரியன் சின்னம் பெறமுடியும். அதைப்போல்தான் அதிமுகவிலும் ஓபிஎஸ், ஈபிஎஸ் கையெழுத்திட்டால்தான் இரட்டை இலை பெற முடியும். அதிமுகவின் இரட்டை தலைமையால் எந்தப் பிரச்சினையும் இல்லை. இருவரும் இணைந்து சென்று தமிழகத்தின் நலனுக்காகவே பிரதமரைச் சந்தித்தனர் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x