சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் - நடைமுறைகள் சரியாக பின்பற்றப்படுகிறதா?: ஆணையர் சங்கர் ஜிவால் திடீர் ஆய்வு

சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் - நடைமுறைகள் சரியாக பின்பற்றப்படுகிறதா?: ஆணையர் சங்கர் ஜிவால் திடீர் ஆய்வு
Updated on
1 min read

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைமுறைகள் சரியாகப் பின்பற்றப்படுகிறதா என்பது தொடர்பாக காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

காவல் நிலையங்களில் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், பாதிக்கப்பட்டவர்கள் காவல் ஆணையரிடம் நேரடியாகப் புகார் அளிக்கலாம் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் அரசு விடுமுறை தினங்களைத் தவிர மற்ற நாட்களில் புகார் மனுக்கள் பெறப்பட்டு வந்தன. கரோனா பரவலால் நேரடியாக மனுக்கள் பெறுவது நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், கரோனா பரவல் படிப்படியாக குறைந்துள்ள நிலையில், காவல் ஆணையர் அலுவலகத்துக்கு புகார் மனுக்கள் அளிக்க வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இவ்வாறு புகார் அளிக்க வருவோரின் பெயர், முழு விவரம் உள்ளிட்ட தகவல்களைத் தெரிந்துகொண்ட பிறகே, பாதுகாப்புப் பிரிவு போலீஸார் புகார்தாரரை ஆணையர் அலுவலகத்துக்குள் அனுமதிக்கின்றனர்.

பின்னர், அவரது விவரங்கள் கம்யூட்டரில் பதிவு செய்யப்படுகிறது. இதுபோன்ற நடைமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுகிறதா என்பது தொடர்பாக காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேற்று ஆய்வு மேற்கொண்டார். கூடுதல் ஆணையர் லோகநாதன், உதவி ஆணையர் விஜயராமுலு உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in