புதிய ரேஷன் கார்டு வழங்க ரூ.500 லஞ்சம் கேட்பதாக புகார்

புதிய ரேஷன் கார்டு வழங்க ரூ.500 லஞ்சம் கேட்பதாக புகார்
Updated on
1 min read

இந்நிலையில், தாம்பரம் உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் புதிய ரேஷன் கார்டு வழங்க ரூ.500 முதல் ரூ.1,000 வரை லஞ்சம் கேட்பதாகப் புகார்கள் எழுந்துள்ளன.

தாம்பரத்தை அடுத்த மாடம்பாக்கத்தைச் சேர்ந்தவர் அபிநயா. பள்ளி ஆசிரியை. இவர், புதிதாக ரேஷன் கார்டு கோரி தாம்பரம் உணவுப் பாதுகாப்பு துறை அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் அந்த அலுவலக ஊழியர் என்று கூறி, வீட்டுக்கு வந்தவர் அனைத்து ஆவணங்களையும் சரிபார்த்துவிட்டு, ரூ.1,000 பணம்கேட்டுள்ளார். அபிநயா பணம் தரமறுக்கவே, பணம் கொடுத்தால்தான் கார்டு கிடைக்கும் என்று கூறிவிட்டு, தனது செல்போனின் கூகுள்பே எண்ணைக் கொடுத்துள்ளார். பின்னர், அபிநயா ரூ.500 பணத்தைக் கொடுத்துள்ளார்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது, "ரேஷன் கார்டுக்கு நேரடியாக விண்ணப்பித்தால் லஞ்சம் பெறப்படுகிறது என்பதற்காக, ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், விசாரணை என்ற பெயரில் அதிகாரிகள் ஒருபுரோக்கரை நியமித்துக் கொண்டு, அவர்கள் மூலம் பணம்வசூலிக்கின்றனர். இது தொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும" என்றனர்.

இதுகுறித்து தாம்பரம் உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர் பத்மா சங்கர்கூறும்போது, "லஞ்சப் புகார் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த தகவல் உண்மை எனில், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், அலுவலகத்துக்கு சம்பந்தமில்லாத நபர்கள் இந்தப் பணியை மேற்கொண்டிருந்தால், காவல்துறை மூலம் புகார் செய்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in