Published : 27 Jul 2021 03:14 AM
Last Updated : 27 Jul 2021 03:14 AM

காவலர் தேர்வில் மயங்கி விழுந்த இளைஞர் உயிரிழப்பு

விருதுநகரில் நேற்று நடைபெற்ற தமிழ்நாடு சீருடைப் பணியாளர் உடல் தகுதித் தேர்வின்போது, இளைஞர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

விருதுநகர் மாவட்டத்தில் 2-ம் நிலைக் காவலர், சிறைத் துறை மற்றும் தீயணைப்புத் துறை காவலர்களுக்கான முதற்கட்ட உடல் தகுதி தேர்வு, விருதுநகர் - மதுரை சாலையில் உள்ள கே.வி.எஸ். ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் நேற்று காலை தொடங்கியது.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆண் விண்ணப்பதாரர்கள் 500 பேர் கலந்துகொண்டனர். அவர்களுக்கு, அசல் சான் றிதழ் சரிபார்த்தல், உடற்கூறு அளத்தல், உடல் தகுதி தேர்வு போன்ற தேர்வுகள் நேற்று காலை நடத்தப்பட்டன.

மதுரை சரக டிஐஜி காமினி, எஸ்பி மனோகர் ஆகியோர் தேர்வு நடை பெறு வதைப் பார்வையிட்டனர்.

இத்தேர்வில், விருதுநகர் அருகே உள்ள அழகாபுரியைச் சேர்ந்த மாரிமுத்து (21) என்பவர் பங்கேற்றார்.

அப்போது, விண்ணப்பதாரர் ளுக்கான 1,500 மீட்டர் தகுதி ஓட்டத்தில் கலந்து கொண்டு ஓடும்போது 3-வது சுற்றில் மாரிமுத்து திடீ ரென மயங்கி விழுந்தார்.

அங்கிருந்த காவலர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் விருதுநகர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற் கெனவே அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

இதுகுறித்து விருதுநகர் மேற்கு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x