

ராமேசுவரம் மீனவர்கள் 12 பேரையும், 2 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் நேற்று சிறைபிடித்தனர்.
இலங்கை அரசால் கைப்பற்றப் பட்டுள்ள தமிழக மீனவர்களின் 75 விசைப்படகுகளை மீட்டுத் தர வேண்டும். தமிழக-இலங்கை மீன வர்கள் பிரச்சினைகளை தீர்க்க பேச்சுவார்த்தையை மத்திய அரசு தொடங்க வேண்டும். இலங் கையில் சேதமடைந்துள்ள விசைப் படகுகளுக்கு உரிய நிவாரணம் பெற்றுத் தர வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் தமிழக மீனவர்கள் வேலைநிறுத்தம், உண்ணாவிரதம், துறைமுகம் முற்றுகை உள்ளிட்ட தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். மத்திய, மாநில அரசுகளின் சமரசப் பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் கடந்த ஒரு வாரமாக கடலுக்குச் சென்று வருகின்றனர்.
இந்நிலையில் ராமேசுவரம் மீன் பிடி துறைமுகத்தில் இருந்து 700-க் கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்றுமுன்தினம் கடலுக்குச் சென் றனர். இவர்களில் கிளாஸ்டன், கஸ்தூரி சேதுராமன் ஆகியோருக் குச் சொந்தமான 2 விசைப்படகு களில் 12 மீனவர்கள் மன்னார் அருகே நேற்று அதிகாலை மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக ரோந்து வந்த இலங்கை கடற் படையினர் 12 மீனவர்களையும் சிறைபிடித்தனர். கைப்பற்றப்பட்ட 2 விசைப்படகுகள் தலைமன்னார் கடற்படை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டன. 12 மீனவர்களை மன்னார் மாவட்ட மீன்வளத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். பின்னர் மீனவர்கள் மன்னார் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வவுனியா சிறையில் அடைக்கப் பட்டனர்.
கடந்த வாரம் இலங்கை வெளி யுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இலங்கைப் பயணத்துக் குப் பின்னர் நடைபெறும் முதல் சிறை பிடிப்பு இதுவாகும். ஏற்கெனவே 15 தமிழக மீனவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.