கெயில் திட்டத்துக்கு மாற்றுவழி காணாவிட்டால் போராட்டம்: கட்சி தலைவர்கள் அறிவிப்பு

கெயில் திட்டத்துக்கு மாற்றுவழி காணாவிட்டால் போராட்டம்: கட்சி தலைவர்கள் அறிவிப்பு
Updated on
2 min read

விவசாய நிலங்களில் கெயில் எரிவாயுக் குழாய்கள் பதிக்கும் திட்டத்துக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ள நிலையில், மாற்று வழியில் திட்டத்தை செயல்படுத்தாவிட்டால் போராட் டம் நடத்துவோம் என்று அரசி யல் கட்சித் தலைவர்கள் அறிவித்துள்ளனர்.

இது தொடர்பாக தலைவர்கள் நேற்று வெளியிட்ட அறிக்கை:

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ:

பெட்ரோலியம் மற்றும் கனிமங்கள் குழாய் பதிக் கும் சட்டத்திருத்தின்படி, குழாய் பதிக்கும் திட்டங்களில் மாநில அரசு தலையிட முடியாது என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மாநிலங்களின் உரிமையை பறிக் கும் விதமாக உள்ளது. கெயில் திட்டத்தை நெடுஞ்சாலைகளின் வழியே செயல்படுத்தாவிட்டால் மதிமுக போராட்டம் நடத்தும்.

பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ்:

தமிழகத்தின் 7 மாவட்டங்கள் வழியாக எரிவாயு எடுத்துச் செல்ல கெயில் நிறுவனத்துக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித் திருப்பது தமிழக விவசாயி களுக்கு விழுந்துள்ள பேரிடி ஆகும். இந்த திட்டத்தை மாற்று வழியில் செயல்படுத்தாவிட்டால் பாமக மக்களை திரட்டி போராட் டம் நடத்தும்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநி லச் செயலாளர் ஜி.ராமகிருஷ் ணன்:

விவசாயிகளின் விருப்பத் துக்கு எதிராக அவர்களின் நிலத் தில் எரிவாயு குழாய்களை பதிப் பதை அனுமதிக்க முடியாது. இந்தப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண தமிழக அரசு முன் வர வேண்டும். கெயில் நிறுவனத் துக்கு ஆதரவாக உச்ச நீதிமன் றம் பிறப்பித்துள்ள உத்தரவுக்கு எதிராக மாநில அரசு மேல் முறையீடு செய்ய வேண்டும்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்:

கெயில் திட்டத்துக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித் துள்ளதன் மூலம், தமிழக விவசாயி கள் இத்தனை ஆண்டு கால உழைப்பால் உருவாக்கிய வீடு கள், கிணறுகள், கோழிப் பண்ணை போன்றவற்றை இழக்க நேரிடும். இதனை மத்திய மாநில அரசுகள் நிறைவேற்ற அனுமதிக்கக் கூடாது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பெ.சண்முகம்:

கெயில் எரிவாயு பதிப்பு தொடர்பாக உயர் நீதிமன் றத்தின் அறிவுறுத்தலின்பேரில் நடந்த கருத்துக்கேட்பு கூட்டத் தில், தமிழக அரசு அதிகாரிகள், கெயில் நிறுவன அதிகாரிகள், விவசாயிகள் கடந்த 2013 மார்ச் 6,7,8 தேதிகளில் கலந்துகொண் டனர். அப்போது, விவசாயிகள் அத்திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எனவே, இத்திட் டத்தை மாற்று வழியில் செயல் படுத்த வேண்டும் என்ற தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கெயில் வழக்கு தொடுத்தது. இந்த வழக்கில் கெயில் நிறுவனத்துக்கு ஆதர வாக தீர்ப்பளித்துள்ளது. பிஎம்பி சட்டத் திருத்த மையப்படுத் தியே மாநில அரசுக்கு இதில் தலையீட அதிகாரமில்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள் ளது. பிஎம்பி சட்டத் திருத்தத்தை மத்திய அரசு திரும்பப்பெற வேண் டும் என்பதை தமிழக அரசு வலி யுறுத்த வேண்டும். மேலும், இந்த தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய வேண்டும்.

மமக தலைவர் ஜவாஹி ருல்லா:

கெயில் திட்டத்தால் பண்ணைகள், நீர்த் தொட்டிகள், விவசாயிகளின் விளைநிலங்கள் மிகவும் பாதிக்கப்படும். இதனால் விவசாயம் என்பதே அழிந்து விடும். உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து அரசு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும்.

கொமதேக தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன்:

விவசாயிகளின் உணர் வுகளை புரிந்துகொண்டு நெடுஞ் சாலைகளின் வழியில் கெயில் திட்டத்தை செயல்படுத்த வேண் டும். இல்லையெனில் இத்திட்டத் துக்கு எதிராக போராடுவோம்.

ஐஜேகே தலைவர் பாரி வேந்தர்:

கெயில் திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால், தமிழகம் பாலைவனமாகிவிடும். எனவே, இதனை தடுத்து நிறுத்த வேண்டும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in