Published : 26 Jul 2021 03:12 AM
Last Updated : 26 Jul 2021 03:12 AM

கொல்கத்தா அரசு மருத்துவமனையில் பிணவறை உதவியாளர் பணிக்கு பொறியாளர் உட்பட 8,000 பேர் போட்டி

கொல்கத்தா அரசு மருத்துவ மனையில் பிணவறை உதவியாளர் பணிக்கு 100 பொறியாளர்கள் உட்பட 8,000 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

கடந்த 2019 நவம்பர் மாதபுள்ளிவிவரத்தின்படி மேற்குவங் கத்தில் வேலைவாய்ப்பின்மை சதவீதம் 6.1 ஆக இருந்தது. கரோனாவால் எழுந்த அசாதாரண சூழ்நிலையால் அந்த மாநிலத்தில் வேலைவாய்ப்பின்மை சதவீதம் 17.4 ஆக அதிகரித்திருக்கிறது. அதாவது 6 பேரில் ஒருவருக்கு வேலை இல்லை.

மாநிலத்தின் வேலையில்லா திண்டாட்டத்தை உறுதிப்படுத்தும் வகையில், கொல்கத்தாவில் உள்ள என்ஆர்எஸ் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிணவறை உதவியாளர் பணிக்கு பொறியாளர்கள் உட்பட 8,000 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

என்ஆர்எஸ் மருத்துவமனையில் 6 பிணவறை உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன.இவற்றை நிரப்ப கடந்த டிசம்பர்இறுதியில் விளம்பரம் வெளியிடப்பட்டது. இந்த பணிக்கான கல்வித் தகுதி 8-ம் வகுப்பு ஆகும். வயது வரம்பு 18 முதல் 40 வயது வரை என்றும் மாதம் ரூ.15,000 ஊதியம் வழங்கப்படும் என்றும் விளம்பரத்தில் அறிவிக்கப்பட்டது.

பிணவறை உதவியாளர் பணிக்கு 100 பொறியாளர்கள், 500 முதுநிலை பட்டதாரிகள், 2,000 பட்டதாரிகள் உட்பட 8,000 பேர் விண்ணப்பித்தனர். அதிர்ச்சி அடைந்த மருத்துவமனை நிர்வாகம், பல கட்ட ஆய்வுகளுக்குப் பிறகு 8,000 பேரில் இருந்து 784 பேரை தேர்வு செய்துள்ளது.

இதுகுறித்து மருத்துவமனை தலைவர் சைபால் குமார் முகர்ஜி கூறும்போது, தேர்வு செய்யப்பட்ட 784 பேருக்கு வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி எழுத்துத் தேர்வு நடத்தப்படும். அதன் பிறகு நேர்முகத்தேர்வு நடத்தப்படும். ஏற்கெனவேபிணவறைகளில் பணியாற்றி யோருக்கு முன்னுரிமை வழங்கப் படும்" என்று தெரிவித்தார்.

பிணவறையில் பணியாற்ற பொறியாளர்கள், முதுநிலை பட்டதாரிகள் போட்டியிடுவது, மேற்குவங்கத்தின் வேலையின்மை அவலத்தை அம்பலப்படுத்துகிறது என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x