

நாடு முழுவதும் தலித், மலைவாழ் மக்கள், சிறுபான்மை மக்கள் மீதான தாக்குதல்கள் குறித்து விவாதிப்பதற்கான கூட்டம் தமிழ்நாடுஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் சார்பில் சென்னை மயிலாப்பூரில் நேற்று நடைபெற்றது. அமைப்பின் மாநிலத் தலைவர் நல்லகண்ணு தலைமை வகித்துப் பேசியதாவது:
ஏராளமான சிந்தனையாளர்கள் கருத்து சொல்வது மற்றும் விமர்சனம் செய்யும் காரணத்தாலேயேவழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்கள். இதுஜனநாயகத்தின் மீதான தாக்குதலாகும். தலித் மக்கள், பழங்குடியினர், சிறுபான்மையினர் ஆகியோர் மீதான அடக்குமுறைகள் நாடு முழுவதும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளன. இதுதொடர்பாக நாடாளு மன்றத்தில் விவாதிக்க வேண்டும். ஒடுக்கப்பட்ட மக்களுக்கான பாதுகாப்பை, சட்டப்பூர்வமான உத்தரவாதங்களாக வழங்க வேண்டும்.
சென்னை ஐஐடியில் நிலவும் சாதியப் பாகுபாடுகள், பல்வேறு தனியார் நிறுவனங்களில் நிகழ்த்தப்படும் பெண்கள் மீதான தாக்குதல்கள், பாலியல் சீண்டல்கள் மிகவும் கண்டிக்கத்தக்கவை.
விவசாயத்தைப் பாதிக்கும் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டு்ம். ஒடுக்கப்பட்ட மக்கள், ஏழைகளின் எதிர்பார்ப்புகளை தமிழக முதல்வர் நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இதில் அமைப்பின் மாநிலப் பொதுச் செயலாளர் வீரபாண்டியன், மண் டலப் பொறுப்பாளர் எஸ்.கே.சிவா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.