சுற்றுலா செல்ல மக்கள் ஆர்வம்: கூடுதல் ரயில்களை இயக்க தயாராகும் ஐஆர்சிடிசி

சுற்றுலா செல்ல மக்கள் ஆர்வம்: கூடுதல் ரயில்களை இயக்க தயாராகும் ஐஆர்சிடிசி
Updated on
1 min read

தமிழகத்தில் கரோனா ஊரடங்கு தளர்வுக்குப் பிறகு மக்கள் சுற்றுலாசெல்ல ஆர்வம் காட்டி வருகின்றனர். எனவே, பல்வேறு சுற்றுலா பகுதிகளுக்குச் செல்லும் வகையில் சிறப்பு ரயில்களை இயக்க ஐஆர்சிடிசி தயாராகி வருகிறது.

இதுகுறித்து இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழக அதிகாரிகள் (ஐஆர்சிடிசி) கூறியதாவது: நாடு முழுவதும் மாநில அரசுகள் பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளன.

அன்றாடப் பணி, வெளியூர்ப் பயணம் போன்றவை மேற் கொள்ளப்படுகின்றன. சுற்றுலாத் தலங்களும் படிப்படியாக திறந்து வருவதால், சுற்றுலா செல்ல மக்கள் விரும்புகின்றனர்.

எனவே, ஐஆர்சிடிசி சுற்றுலா ரயில்கள் மக்களின் தேவைக்கு ஏற்ப மீண்டும் இயக்கப்பட உள்ளன. பல்வேறு ஆன்மிக இடங்களுக்குச் செல்ல மக்கள் ஆர்வம் தெரிவித்துள்ள நிலையில், ஆடி அமாவாசை சிறப்பு சுற்றுலாவுக்கு இதுவரை 600-க்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர்.

இதேபோல, பிற இடங்கள்மற்றும் விமான சுற்றுலாவுக்கும் திட்டங்கள் தயாராகி வருகின்றன. விரைவில் திட்ட விவரங்கள் அறிவிக் கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in