தமிழகத்தில் பழமையான இடங்களை பராமரிக்க தொல்லியல் ஆணையம் அமைக்க ஆலோசனை: அரசு முதன்மைச் செயலர் பி.சந்திரமோகன் தகவல்

கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்களை பார்வையிட்ட சுற்றுலா மற்றும் அறநிலையத் துறை முதன்மைச் செயலர் சந்திரமோகன். அருகில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி.
கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்களை பார்வையிட்ட சுற்றுலா மற்றும் அறநிலையத் துறை முதன்மைச் செயலர் சந்திரமோகன். அருகில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி.
Updated on
1 min read

தமிழகத்தில் பழமையான இடங் களைப் பராமரிக்க தொல்லியல் ஆணையம் அமைப்பது குறித்து ஆலோசனை நடைபெறுகிறது என தமிழக சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையத் துறை முதன்மை செயலர் பி.சந்திர மோகன் தெரி வித்தார்.

மதுரை திருமலை நாயக்கர் அரண்மனையில் அவர் நேற்று ஆய்வு செய்தார். பின்னர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:

மதுரையில் திருமலை நாயக்கர் மஹாலில் ரூ.8.27 கோடியில் சீரமைப்புப் பணிகளை செய்யத் திட்டமிட்டுள்ளோம். ஒளி, ஒலி காட்சிக்கு ஏற்றவாறு ரூ.1.7 கோடியில் புதிய விளக்குகள் அமைக்கப்பட உள்ளன. அதற்கான ஒப்பந்தப் பணிகளுக்காக அர சாணை கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்டது.

தேர்தல் மற்றும் கரோனா காலம் என்பதால் தாமதமானது. தற்போது விரைந்து முடிக்க திட்ட மிடப்பட்டுள்ளது.

கீழடி அருங்காட்சியகம் அமைக்கும் பணி கரோனாவால் தாமதமானது. தற்போது இப்பணி வேகமாக நடைபெறுகிறது. தமி ழகத்தில் பழமையான இடங் களைப் பராமரிக்க தொல்லியல் ஆணையம் அமைப்பது குறித்து ஆலோசனை நடைபெறுகிறது. அதற்கான அறிவிப்பு விரைவில் வர வாய்ப்புள்ளது.

மீனாட்சி அம்மன் கோயில் வீரவசந்தராயர் மண்டபம் சீரமைப்புப் பணிக்கு தற்போது தான் கற்கள் வந்துள்ளன. ஸ்தபதி குழு மூலம் சிற்பங்கள், சிலைகள் செதுக்கும் பணி முடிய மூன்று ஆண்டுகள் ஆகும். அதற்கு பிறகு மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளி யாகும். இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது மதுரை மாவட்ட ஆட்சியர் எஸ்.அனீஷ்சேகர், மாநகராட்சி ஆணையாளர் கா.ப.கார்த்திகேயன் ஆகியோர் உடனிருந்தனர்.

இதைத் தொடர்ந்து அவர் கொந்தகையில் ரூ.12.21 கோடியில் கீழடி அகழ் வைப்பகம் கட்டும் பணியை பார்த்தார்.

அப்போது அகழ் வைப்பகம் கட்டும் பணியை குறித்த காலத்தில் கட்டி முடிக்க நடவடிக்கை எடுக்குமாறு பொதுப்பணித் துறை, தொல்லியல் துறை அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி உடன் இருந் தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in