Published : 25 Jul 2021 03:13 AM
Last Updated : 25 Jul 2021 03:13 AM

‘இந்து தமிழ் திசை’, வி.எஸ்.நடராஜன் முதியோர் அறக்கட்டளை சார்பில் முதியோருக்கு ஆன்லைனில் இலவச யோகா பயிற்சி: வாரம்தோறும் செவ்வாய்க்கிழமை நடக்கிறது

‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், டாக்டர்வி.எஸ்.நடராஜன் முதியோர் நலஅறக்கட்டளை சார்பில் வாரம்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் முதியோருக்கான இலவச யோகாபயிற்சி ஆன்லைனில் நடத்தப்பட்டு வருகிறது.

வயதான காலத்தில் உடலையும், உள்ளத்தையும் நலமாக வைத்திருக்க மருந்து, மாத்திரைகளால் மட்டும் முடியாது. யோகா பயிற்சிசெய்வதன் மூலம் உடலையும், உள்ளத்தையும் புத்துணர்ச்சியாக, ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள முடியும். வயதுக்கேற்ப சிறு பயிற்சிகளை செய்வதன் மூலம் ஏராளமான பலன்களை பெற்று நலமுடன் வாழலாம்.

கரோனா பேரிடர் காலத்தில் முதியவர்கள் வீட்டிலேயே முடங்கி யுள்ளனர். இவர்களுக்கு உடல்வலி, மூட்டுவலி, பசியின்மை, உடல் சோர்வு போன்ற உபாதைகள் அதிகம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இத்துடன் மனச் சோர்வுக்கும் முதியவர்கள் ஆளாகின்றனர்.

இதில் இருந்து முதியோர் விடுபட, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழும், டாக்டர் வி.எஸ்.நடராஜன் முதியோர்நல அறக்கட்டளையும் இணைந்து ஆன்லைனில் இலவச யோகா பயிற்சியை வழங்குகின்றன. ஜூலை 13-ம் தேதி தொடங்கப்பட்ட இப்பயிற்சி, ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையிலும் காலை 11 முதல் பகல் 12 மணி வரை நடக்கிறது.

யோகாவில் மிகுந்த அனுபவம் பெற்றவரும், இந்தியாவின் பல்வேறு பகுதிகள் மட்டுமின்றி அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் உள்ளவர்களுக்கும் ஆன்லைனில் யோகா பயிற்சி அளித்து வருபவருமான பல் மருத்துவர் நந்தினி, இதில் பங்கேற்று, யோகா கற்றுத் தருகிறார்.

இப்பயிற்சியில் பங்கேற்று ஏராளமான முதியவர்கள் பயனடைந்து வருகின்றனர். சென்னை மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள முதியோர் இல்லங்களில் இருப்பவர்களும் இதில் பங்கேற்று வருகின்றனர்.

இப்பயிற்சியில் பங்கேற்பதற்கான ஆன்லைன் இணைப்பு ஒருநாள் முன்னதாக திங்கள்கிழமை அறிவிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு ராஜசேகரன் மணிமாறன் என்பவரை 7200519167, 9994902173,044-48615866, 24331866 ஆகிய எண்களிலும், rm@drvsngeriatricfoun dation.com என்ற மின்னஞ்சல் வழியாகவும் தொடர்புகொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x