Published : 25 Mar 2014 09:50 AM
Last Updated : 25 Mar 2014 09:50 AM

தேர்தலுக்கு பின் அதிமுகவிடம் ஆதரவு கோரமாட்டோம்: பாஜக

“மக்களவைத் தேர்தல் முடிவுக்கு பிறகு அதிமுக ஆதரவை பாஜக எக்காரணம் கொண்டும் கேட்காது. அதற்கான சூழ்நிலை ஏற்படாது” என பாஜக பிரச்சார அணி மாநிலத் தலைவர் சரவணன் தெரிவித்தார்.

பாஜக செயல்வீரர்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை ஈரோட்டில் நடந்தது.

அதில் ஆ.சரவணன் பேசிய தாவது: நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக மிகப் பெரும்பான்மையான இடங்களைப் பெற்று ஆட்சி அமைப்பது உறுதியானது. தமிழகத்தில் முதன்முறையாக ஒரு தேசிய கட்சியின் தலைமையில் கூட்டணி அமைந்துள்ளது.

இந்த கூட்டணி 20 இடங்களுக்கும் மேலான தொகுதிகளில் வெற்றி பெறும். இந்த கூட்டணி அமைவதற்கு முன், பொதுக்கூட்டங்களில் பேசிய ஜெயலலிதா, மத்தியில் அஇஅதிமுக பங்கு கொள்ளும் ஆட்சி மலரும் என்றார். தமிழகத் தில் பாஜக தலைமையில் வலு வான கூட்டணி அமைத்தபிறகு “மத்தியில் அமையும் ஆட்சியில் அஇஅதிமுகவின் பங்கும் உண்டு” என அவரது பேச்சில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

தேர்தலுக்குப் பின் எக்காரணத்தைக் கொண்டும், பாஜக அஇஅதிமுகவின் ஆதரவை நாடாது. இன்னும் சொல்லப் போனால் அதற்கான சூழ்நிலையும் ஏற்படாது. வழக்குகளில் சிக்கியிருக் கும் தமிழக முதல்வரால் பிரதமராக முடியாது என்பது தெரிந்தும், அதிமுகவினர் கோஷமிடுவது வேடிக்கையாக இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

முதல்வர் ஜெயலலிதா தனது பிரச்சார கூட்டங்களில் பாஜக குறித்து எவ்வித விமர்சனமும் வைக்காத நிலையில், பாஜக மாநிலத் தலைவர் பொன். ராதா கிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் அதிமுக குறித்தும், அரசின் செயல் பாடு குறித்தும் தேர்தல் பிரச்சாரத் தில் மென்மையானப் போக்கை கடைபிடித்துவரும் நிலையில், பாஜக.வில் இருந்து இத்தகைய கருத்து வெளியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x