

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தனது சாதுர்மாஸ்ய விரதத்தை ஓரிக்கையில் உள்ள மகா பெரியவர் மணி மண்டபத்தில் நேற்று தொடங்கினார்.
ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதத்தில் வரும் பௌர்ணமியன்று வியாச பூர்ணிமா அல்லது குரு பூர்ணிமா அனுசரிக்கப்படும். இந்த நேரத்தில் ஆசிரமத்தில் இருக்கும் துறவிகள் வேத வியாசரை பூஜை செய்து ஆராதிப்பது வழக்கம். இந்த நாளில் ஒரே இடத்தில் தங்கிஇருந்து சாதுர்மாஸ்ய விரதத்தையும் துறவிகள் தொடங்குவர்.
காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மடாதிபதியான ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தனது சாதுர்மாஸ்ய விரதத்தை, காஞ்சிபுரம்அருகே ஓரிக்கை பாலாற்றங்கரையில் உள்ள மகா பெரியவர் மணி மண்டபத்தில் தொடங்கினார்.
அங்கேயே சந்திரமவுலீசுவரர் பூஜை, வியாச பூஜை, குரூ பூஜை நடைபெற்றன. சங்கர மடத்தின் ஆஸ்தான வித்வான்களின் இன்னிசை கச்சேரிகளும் நடைபெற்றன. பக்தர்கள் பலர் பங்கேற்றனர்.