தமிழக அரசின் 50 சத மானியத்தில் வக்ஃப் நிறுவனத்தில் பணியாற்றும் உலமாக்களுக்கு இருசக்கர வாகனங்கள்

தமிழக அரசின் 50 சத மானியத்தில் வக்ஃப் நிறுவனத்தில் பணியாற்றும் உலமாக்களுக்கு இருசக்கர வாகனங்கள்
Updated on
1 min read

கள்ளக்குறிச்சி மாவட்டம் வக்ஃப் நிறுவனத்தில் பணியாற்றும் உலமாக்களுக்கு இருசக்கர வாகனங்கள் வாங்க மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பி.என்.தர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஆட்சியர் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு வக்ஃபு வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட வக்ஃப் நிறுவனங்களில் பணியாற்றும் உலமாக்களுக்கு தங்கள் பணியினை சிறப்பாகவும் செம் மையாகவும் செயல்படுத்துவதற்கு ஏதுவாக இருசக்கர வாகனங்கள் வாங்க மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் விண்ணப் பிக்கும் தகுதியுள்ள நபருக்கு இருசக்கர வாகனத்தின் மொத்த விலையில் 50 சதவீதம் அல்லது ரூ. 25 ஆயிரம் இதில் எது குறைவோ அத்தொகை வழங்கப்படும்.

இத்திட்டத்தின் கீழ், தகுதி யான நபர்களிடமிருந்து விண் ணப்பங்கள் வரவேற்கப்படுகிறன.

விண்ணப்பதாரர்கள் தமிழ் நாட்டில் வக்ஃப் வாரியத்தில் பதிவுசெய்யப்பட்ட வக்ஃப் நிறுவனங்களில் விண்ணபிக்கும் நாளில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணியாற்றிருக்க வேண்டும்.

தமிழ்நாட்டைச் சார்ந்தவராக இருத்தல் வேண்டும். வயது 18-லிருந்து 40 வயதிற்குட்பட்டவராக இருத்தல் வேண்டும். விண்ணப் பிக்கும் போது இரு சக்கர வாகனம் ஓட்டும் கற்றுணர்வுக்கான சான் றிதழ் பெற்றிருத்தல் வேண்டும். கல்வித் தகுதி 8-ம் வகுப்பு, பதிவு செய்யப்பட்ட வக்ஃபு நிறுவனத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் மானிய உதவி கோரி விண்ணப்பம் செய்தால் பேஷ் இமாம், அரபி ஆசிரியர்கள், மோதினார், முஜாவர் என்ற வரிசைப்படி முன்னுரிமை அடிப்படையில் ஒருவருக்கு மட்டும் மானியத் தொகை வழங்கப்படும்.

விண்ணப்பதாரர்கள் விண்ணப் பத்துடன் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வயது சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை, புகைப்படம், சாதிச் சான்று, மாற்றுத் திறனாளியாக இருப்பின் புகைப்படத்துடன் கூடிய உரிய அலுவலரிடம் சான்று, ஓட்டுநர் உரிமம், கல்வித் தகுதி சான்றிதழ் 8-ம் வகுப்பு, வங்கி கணக்கு எண் மற்றும் ஐஃஎப்எஸ்சி (IFSC) குறியீடுடன் கூடிய வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்கம் நகல், சம்மந்தப்பட்ட முத்தவல்லியிடம் எத்தனை ஆண்டுகளாக மேற்படி வக்ஃபில் பணிபுரிகிறார் என்பதற்கான சான்று பெற்று மாவட்ட வக்ஃப் கண்காணிப்பாளர் மேலொப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டும்.

வாகனம் வாங்குவதற்கான விலைப்பட்டியல் விலைப்புள்ளி ஆகிய சான்றுகளை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும், மானிய விலையில் இரு சக்கர வாகனம் வாங்கத் தேவையான விவரங்கள் மற்றும் படிவத்தினை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப் பட்டோர் நல அலுவலகத்தில் நேரில் பெற்று, அதனை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில், (மாவட்ட ஆட்சியரகம், கள்ளக்குறிச்சி) நேரில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படு கிறார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in