

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே மெய்யபுரத்தில் கடந்த 2018-ல் விநாயகர் ஊர்வலத்தின்போது மேடை அமைக்ககாவல்துறை தடை விதித்தது. இதையடுத்து, ஊர்வலத்தில் பங்கேற்ற பாஜக முன்னாள் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா, நீதிமன்றத்தையும் காவல் துறையையும் அவதூறாக விமர்சித்ததாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக ஹெச்.ராஜாஉட்பட 20 பேர் மீது திருமயம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்தவழக்கில் கடந்த மாதம் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து ஜூலை 23-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு திருமயம் உரிமையியல் மற்றும் நடுவர் நீதிமன்றம் சம்மன்அனுப்பியது. இந்நிலையில், தனக்கு முன்ஜாமீன் வழங்குமாறுஹெச்.ராஜா தாக்கல் செய்தமனுவை மதுரை உயர் நீதிமன்றக்கிளை அண்மையில் தள்ளுபடி செய்ததுடன், 23-ம் தேதி கீழமை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிட்டது.
இதையடுத்து, திருமயம் நீதிமன்றத்தில் நீதிபதி இந்திராகாந்தி முன்னிலையில் ஹெச்.ராஜா நேற்றுஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி, விசாரணையை செப்.17-ம்தேதிக்கு தள்ளி வைத்தார்.