Published : 24 Jul 2021 03:13 am

Updated : 24 Jul 2021 05:28 am

 

Published : 24 Jul 2021 03:13 AM
Last Updated : 24 Jul 2021 05:28 AM

காதலித்து விட்டு திருமணத்திற்கு மறுப்பு- நீதிமன்ற ஊழியருக்கு 10 ஆண்டுகள் சிறை

court-staff-arrested

விருத்தாசலம்

விருத்தாசலத்தை அடுத்த மணலூ ரைச் சேர்ந்தவர் பிரபு (25). இவர், அப்பகுதியில் உள்ள 24 வயது பெண்ணை 5 ஆண்டுகளாக காதலித்து வந்தார். கடந்த 3 ஆண்டு களுக்கு முன்பு அந்தப் பெண் கருவுற்றார். அப்போது, பிரபு வேலை இல்லாமல் இருந்ததால் வேலை கிடைத்ததும் திருமணம் செய்து கொள்ளலாம் என்றும் இப்போதைக்கு கர்ப்பத்தை கலைக்குமாறு கூறியிருக்கிறார். அவரும் கர்ப்பத்தை கலைத் துள்ளார்.

அதன் பின்னர் பிரபுவுக்கு நீதிமன் றத்தில் பணி கிடைத்துள்ளது. இதையடுத்து அப்பெண் தன்னை திரும ணம் செய்து கொள்ளுமாறு வற் புறுத்த, அவர் திருமணம் செய்ய மறுத்துள்ளார். இதனால், அப்பெண் கடந்த 2017-ம் ஆண்டு விஷ விதை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன் றார். உறவினர்கள் அவரை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்து வமனையில் சேர்த்தனர்.


அப்போது, பிரபு மீது வழக்குப் பதிவானால் பணி கிடைக்காது என்பதால் 3 மாதங்களுக்குப் பிறகு திருமணம் செய்து வைப்பதாகவும், இப்போதைக்கு புகார் அளிக்க வேண்டாம் என்று பிரபுவின் பெற்றோர் அப்பெண்ணிடம் தெரி வித்துள்ளனர். அதை நம்பிய அப்பெண் புகார் தரவில்லை. ஆனால், வாக்குறுதி அளித்தபடி திருமணம் செய்துவைக்க முன்வராமல், அப்பெண்ணின் வீட்டிற்குச் சென்று கழுத்தை நெரித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதுகுறித்து, அப்பெண் விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 10-11-2017 அன்று புகார் அளித்ததன் பேரில் போலீஸார் வழக்குப் பதிவுசெய்து பிரபுவை கைது செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணை கடலூர் அனைத்து மகளிர் நீதி மன்றத்தில் நடைபெற்று வந்தது. நீதிபதி பாலகிருஷ்ணன் நேற்று தீர்ப்பு வழங்கினார். அதில், பெண்ணை காதலித்து ஏமாற்றி கர்ப்பத்தை கலைத்த நீதிமன்ற ஊழியரான பிரபுவுக்கு 10 ஆண்டுகள் சிறையும், ரூ.55 ஆயிரம் அபராதமும் விதித்தார். மேலும் இதற்கு உடந்தையாக இருந்த அவரது பெற்றோர் அன்பழகன், ராஜேஸ்வரி ஆகியோருக்கு தலா 2 ஆண்டு சிறையும், ரூ.5 ஆயிரமும் அபராதமாக விதித்து தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு வழக்கறிஞராக க.செல்வபிரியா ஆஜரானார்.


காதலித்து விட்டு திருமணத்திற்கு மறுப்புநீதிமன்ற ஊழியருக்கு 10 ஆண்டுகள் சிறைCourt staff arrested

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x