

மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் திருமங்கலம் ஒன்றியக் கிளைக் கூட்டம் டி.குன்னத்தூரில் நடந்தது.
இதில் புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் ஆர்.பி.உதயகுமார் எம்எல்ஏ பேசியதாவது: அதிமுக வில் விரைவில் உட்கட்சித் தேர் தல் அறிவிக்கப்பட உள்ளது. ஜனநாயக நெறிமுறைப்படி நாம் தேர்தலை நடத்த வேண்டும்.
போக்குவரத்து அமைச்சராக இருந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் சிறப்பாகச் செயல்பட்டார். அத்துறையை முன்மாதிரி துறையாக மாற்ற பாடுபட்டார். தொழிலாளர்கள் பிரச்சினையை எளிதாகக் கையாண்டார்.
திமுக அரசுக்கு பல்வேறு சவால்கள் இருக்கும் நிலையில், எதிர்க்கட்சியினரை பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. எம்.ஆர்.விஜய பாஸ்கர் மீதான ரெய்டு நடவடிக்கையை அதிமுக மீது சேற்றை வாரி இறைக்க திமுக முயற்சிக்கிறது என்பதாகத்தான் மக்கள் பார்ப்பார்கள்.
எதிர்க்கட்சியே இருக்கக் கூடாது என்று திமுக நினைக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.