மகாராஷ்டிராவில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் இதயம் சிறுவனுக்கு பொருத்தம்: கடலோர காவல் படை விமானத்தில் சென்னை கொண்டுவரப்பட்டது

மகாராஷ்டிராவில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் இதயம் சிறுவனுக்கு பொருத்தம்: கடலோர காவல் படை விமானத்தில் சென்னை கொண்டுவரப்பட்டது
Updated on
2 min read

மகாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் இதயம், கடலோர காவல் படையின் டார்னியர் விமானத்தில் சென் னைக்கு கொண்டு வரப்பட்டு டெல்லி சிறுவனுக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டது.

மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்தவர் ராம்போ ரங்கநாத் (28). சாலை விபத்தில் பலத்த காயமடைந்த இவர், அவுரங்கா பாத்தில் உள்ள சேத் நந்தலால் தூத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், நேற்று முன்தினம் அவர் மூளைச்சாவு அடைந்தார். மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய விரும்புவதாக பெற்றோர் தெரிவித்தனர்.

இதையடுத்து டாக்டர்கள் அறுவை சிகிச்சை மூலம் ராமின் உடலில் இருந்து சிறுநீரகங்கள், கல்லீரல், இதயம், நுரையீரல் மற்றும் கண்களை எடுத்தனர். இதயம் தவிர மற்ற அனைத்து உறுப்புகளும் அந்த மாநில மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டது. இதயம் யாருக்கும் பொருந்தாததால், தமிழ கத்துக்கு கொடுக்க முடிவு செய்யப்பட்டது.

இதையறிந்த சென்னை பெரும் பாக்கத்தில் உள்ள குளோபல் மருத்துவமனை நிர்வாகம், அந்த இதயத்தை பெறுவதற்கான முயற்சியில் இறங்கியது. அங்கி ருந்து இதயத்தை கொண்டு வருவதற்கு உடனடியாக விமானம் கிடைக்காததால், அந்த திட்டத்தை அம்மருத்துவமனை கைவிட்டது.

சென்னை அடையாறில் உள்ள ஃபோர்டிஸ் மலர் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் டெல்லியைச் சேர்ந்த ராமன் (16) என்ற சிறுவன், மாற்று இதயத்துக்காக காத்திருந் தான். அவுரங்காபாத் மருத்துவ மனையில் இதயம் இருப்பது தெரிந்ததும் கடலோர காவல் படை அதிகாரிகளுடன் ஃபோர் டிஸ் மருத்துவமனை நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தியது. கடலோர காவல் படை அதிகாரி களும் இதயத்தை கொண்டு வரு வதற்கு உதவி செய்வதாக தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து டாக்டர் கள் குழுவினர் சென்னை பரங்கி மலையில் ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்துக்கு (ஓடிஏ) சென்றனர். அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளி விமான தளத்தில் இருந்து புறப்பட்ட டார்னி யர் விமானம், ஓடிஏவுக்கு வந்து டாக்டர்கள் குழுவினரை ஏற்றிக் கொண்டு அவுரங்காபாத் சென்றது. அங்குள்ள ராணுவ பயிற்சி மையத்தில் விமானம் தரையிறங்கி யதும், டாக்டர்கள் குழுவினர் ஆம்புலன்ஸில் சேத் நந்தலால் தூத் மருத்துவமனைக்கு சென்றனர். இதயத்தை பெற்றுக்கொண்டு மீண்டும் ராணுவ பயிற்சி மையத் துக்கு திரும்பினர்.

இதயத்துடன் நேற்று காலை 8.40 மணிக்கு புறப்பட்ட டார்னியர் விமானம், பகல் 11.40 மணிக்கு சென்னை ஓடிஏ வந்தடைந்தது. அங்கிருந்து 11.48 மணிக்கு புறப் பட்ட ஆம்புலன்ஸ், 11.56 மணிக்கு ஃபோர்டிஸ் மருத்துவ மனைக்கு சென்றது. அங்கு தயார் நிலையில் இருந்த டாக்டர்கள் குழுவினர், உடனடியாக அறுவை சிகிச்சை செய்து தானமாக கிடைத்த இத யத்தை சிறுவன் ராமனுக்கு வெற்றி கரமாக பொருத்தினர்.

இந்தியாவில் முதல்முறை

இதுதொடர்பாக மருத்துவமனை தரப்பில் கேட்டபோது, ‘‘சிறுவனின் உயிரை காப்பாற்றுவதற்காக கடலோர காவல் படையினர் டார்னியர் விமானத்தை கொடுத்து உதவி செய்தனர். நாட்டிலேயே முதல்முறையாக கடலோர காவல் படை விமானத்தில் இதயம் கொண்டு வரப்பட்டுள்ளது’’ என்றனர்.

ராமின் உடலில் இருந்த இதயம் தவிர மற்ற அனைத்து உறுப்புகளும் அந்த மாநிலத்தில் சிகிச்சைப் பெற்று வரும் நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டது. இதயம் தமிழகத்துக்கு கொடுக்க முடிவு செய்யப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in