இன்று மகாமகம் கும்பகோணத்துக்கு 200 சிறப்பு பஸ்கள்

இன்று மகாமகம் கும்பகோணத்துக்கு 200 சிறப்பு பஸ்கள்
Updated on
1 min read

மகாமகம் திருவிழாவையொட்டி சென்னையில் இருந்து கும்பகோணத்துக்கு நேற்று 200 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இதனால், கோயம்பேட்டில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

கும்பகோணம் மகாமக தீர்த்த வாரி இன்று நடக்கிறது. இதையொட்டி பல்வேறு இடங்களில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் கும்பகோணத்தில் குவிந்து வருகின்றனர்.

பக்தர்களின் வசதிக்காக தமி ழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கும்பகோணத்துக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை கோயம் பேட்டில் இருந்து கடந்த 3 நாட் களாக சிறப்பு பஸ்கள் இயக் கப்படுகின்றன.

இது தொடர்பாக அரசு போக்கு வரத்து கழக அதிகாரிகள் கூறும்போது, ‘‘மகாமகத்தை யொட்டி அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் பல்வேறு இடங்களில் இருந்து கும்பகோ ணத்துக்கு சிறப்பு பஸ்கள் இயக் கப்பட்டு வருகின்றன. சென்னை கோயம்பேட்டில் இன்று (நேற்று) மட்டுமே 200-க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. பக்தர்கள் சொந்த ஊர் திரும்ப வசதியாக, கும்பகோணத்தில் இருந்து பல்வேறு இடங்களுக்கு 22-ம் தேதி முதல் சிறப்பு பஸ்களை இயக்குவோம்’’ என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in