வக்ஃபு வாரிய தலைவராக  அப்துல்ரகுமான் தேர்வு

வக்ஃபு வாரிய தலைவராக  அப்துல்ரகுமான் தேர்வு
Updated on
1 min read

தமிழ்நாடு வக்ஃபு வாரிய தலைவர் தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முதன்மை துணைத் தலைவரும், வேலூர் தொகுதி முன்னாள் எம்.பி.யுமான எம்.அப்துல்ரகுமான் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அதன்பின் அவர், நேற்று மாலை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

வக்ஃபு வாரியத்தின் கீழ் சமுதாயம் எதிர்பார்க்கும் பல்வேறு பணிகள் உள்ளன. நிர்வாகத்தை சீரமைத்து சிறப்பான பணிகள்
மேற்கொள்ளப்படும். வாரியத்தின் தகவல்கள், சொத்து விவரங்கள் கணினி மயமாக்கப்பட்டு நவீன வசதிகள் செய்யப்படும்.
ஆக்கிரமிப்பில் உள்ள நூற்றுக்கணக்கான சொத்துக்களை சட்டரீதியாக விடுவித்து, வாரியத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்படும். இவ்வாறு அவர் கூறினார்.தமிழ்நாடு வக்ஃபு வாரிய தலைவராக தேர்வு செய்யப்பட்ட முன்னாள் எம்.பி. அப்துல்ரகுமான் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in