சட்டப்பேரவை வளாகத்தில் முதல்வரை சந்தித்த பாலபாரதி, ரங்கராஜன்

சட்டப்பேரவை வளாகத்தில் முதல்வரை சந்தித்த பாலபாரதி, ரங்கராஜன்
Updated on
1 min read

சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதாவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் பால பாரதி மற்றும் காங்கிரஸ் அதிருப்தி உறுப்பினர் ரங்கராஜன் ஆகியோர் சந்தித்து பேசினர்.

நேற்று முன்தினம் சட்டப் பேரவையில் இடைக்கால பட்ஜெட் மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் கே.பாலபாரதி, அரசு ஊழியர் கள் கோரிக்கைகள் குறித் தும், தொகுப்பூதியம் மற்றும் மதிப்பூதியம் பெறும் அங்கன் வாடி, சத்துணவு ஊழியர்கள் கோரிக்கை தொடர்பாகவும், கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களின் ஊதியத்தை உயர்த்துவது குறித் தும் பேசினார்.

இந்நிலையில், சட்டப் பேரவை யில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், முதல்வர் ஜெயலலிதா அரசு ஊழியர்களுக்காக, 110 விதியின் கீழ் 11 அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் பணப் பயன்களை உயர்த்தி அறிவித்தார். கவுரவ விரிவுரையாளர்களுக்கு மாத மதிப்பூதியத்தை ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.15 ஆயிரமாக உயர்த்தியும், பங்களிப்பு ஓய்வூதியம் தொடர் பாக குழு அமைக்கப்படும் எனவும் அறிவித்தார். இதை மேஜையை தட்டி கம்யூனிஸ்ட் உறுப்பினர் கே.பாலபாரதி வரவேற்றார்.

இதையடுத்து, முதல்வரின் அறிவிப்புகளுக்கு நன்றி தெரி வித்து கூட்டணி கட்சியினர், அமைச்சர்கள் பேசினர். அதில், காங்கிரஸ் அதிருப்தி உறுப் பினர் என்.ஆர்.ரங்கராஜனும் பங்கேற்று, முதல்வருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து பேசினார்.

வாழ்த்து

தொடர்ந்து, முதல்வர் பேர வையில் இருந்து புறப்பட்டபோது, மார்க்சிஸ்ட் உறுப்பினர் கே.பால பாரதி மற்றும் காங்கிரஸ் அதிருப்தி உறுப்பினர் ரங்கராஜன் ஆகியோர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். அவர் களுடன் முதல்வர் சில நிமிடங்கள் பேசிவிட்டு புறப்பட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in