திமுகவில் இணைந்தார் இமான் அண்ணாச்சி

திமுகவில் இணைந்தார் இமான் அண்ணாச்சி
Updated on
1 min read

தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளரும், நகைச்சுவை நடிகருமான இமான் அண்ணாச்சி திமுக கட்சியில் இணைந்தார்.

இமான் அண்ணாச்சி இன்று திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்துப் பேசினார். அப்போது திமுக கட்சியில் இணையும் விருப்பத்தை இமான் தெரிவித்தார்.

கருணாநிதியும் அதை ஏற்று, கட்சியில் இணைத்துக் கொண்டார். அப்போது துரைமுருகன், ஆ. ராசா. ஏ.எல்.அழகப்பன் ஆகியோர் உடன் இருந்தனர்.

இமான் அண்ணாச்சி தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதியைச் சார்ந்தவர். தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதோடு, திரைப்படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்ர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

கட்சி மேலிடம் கேட்டுக்கொண்டால், தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபடுவேன் என்று இமான் அண்ணாச்சி தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in