Published : 23 Jul 2021 07:13 AM
Last Updated : 23 Jul 2021 07:13 AM

வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில் புதிய தொழிற்சாலைகளை கொண்டு வர திட்டம்: அதிகாரிகளுடன் அமைச்சர் நமச்சிவாயம் ஆலோசனை

புதுச்சேரி

புதுச்சேரியில் புதிய தொழிற்சாலைகளைத் தொடங்கி வேலைவாய்ப்பு ஏற்படுத்த அதிகாரிகளு டன் துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆலோசனை நடத்தினார். விரைவில் டெல்லி சென்று நிதி கோரவும் திட்டமிட்டுள்ளார்.

புதுவை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தன்னிடம் உள்ள துறைகள் வாரியாக ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகிறார். காவல்துறை, பள்ளி, கல்லூரி கல்வி ஆகிய துறைகள் தொடர்பாக ஆலோசனைக் கூட்டங்களை நடத்தியதைத் தொடர்ந்து, நேற்று தொழில்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

தட்டாஞ்சாவடியில் உள்ள மாவட்ட தொழில் மைய அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் தொழில் துறைச் செயலர் வல்லவன், தொழில் துறை இயக்குநர் யாசம் லட்சுமி நாராயண ரெட்டி, ஏஎப்டி நிர்வாக இயக்குநர் சிவக்குமார், துணை இயக்குநர் சந்திரகுமரன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் அன்பழகன் மற்றும் தொழில்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில், புதுவையில் தற்போதுள்ள தொழிற்சாலைகள், அவைகளுக்கு வழங்கப்படும் சலுகைகள், அனுமதி பெறு வதற்கான விதிமுறைகள், தொழில்கொள்கை குறித்து விவா திக்கப்பட்டது.

தொடர்ந்து பேசிய அமைச்சர் நமச்சிவாயம், புதுவையில் இருந்து தொழிற்சாலைகள் வெளியேறியதற்கான காரணங்கள் குறித்து ஆராய வேண்டும் என கேட்டுக் கொண்டார். புதிய தொழிற்சாலைகளை கொண்டு வர என்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பது தொடர்பாகவும் அதிகாரிகளின் கருத்துக்களை கேட்டறிந்தார்.

இக்கூட்டத்தில் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. தொழிற்சாலைகளை வரவழைக்க தொழில் முனைவோர் கூட்டங் களை நடத்த வேண்டும். இந்த கூட்டத்தில் இந்தியா மட்டுமின்றி, வெளிநாடுகளை சேர்ந்த தொழில் முனைவோரையும் பங்கேற்க செய்து புதுவையில் தொழில் தொடங்க அழைப்பு விடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. புதுவையில் தொழில் தொடங்கினால் எத்தகைய சலுகைகள் வழங்கலாம் என்றும் தொழில் தொடங்க அனுமதியை மேலும் எளிதாக்குவது குறித்தும் கூட்டத்தில் ஆராயப்பட்டது.

இவை அனைத்தையும் உடனே நிறைவேற்ற அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டார். தொழில்துறையில் காலியாக உள்ள இடங்களை உடன் பணியமர்த்த உத்தரவி்ட்டார்.

விரைவில் மத்திய அமைச்சரை சந்தித்து துறைகளுக்கு தேவை யான அனுமதி, நிதி பெற டெல்லி செல்ல திட்டமிட்டுள்ளார் என்று கூட்டத்தில் பங்கேற்றோர் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக அமைச்சர் நமச்சிவாயம் கூறுகையில், "தொழில்துறை தொடர்பாக ஆலோசித்தோம். புதிதாக தொழிற்சாலை கள் கொண்டு வரும் வழிமுறை களை ஆராய்ந்தோம். புதுச்சேரிஇளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு தொடர்பாக கலந்து ஆலோ சித்தோம். இன்றைய சூழலுக்கு ஏற்ப புதிய தொழிற்கொள்கை உருவாக்க திட்டமிட்டுள்ளோம்" என்று தெரிவித்தார்.

இன்றைய சூழலுக்கு ஏற்ப புதிய தொழிற்கொள்கை உருவாக்க திட்டமிட்டுள்ளோம்" என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x