Published : 23 Jul 2021 07:13 am

Updated : 23 Jul 2021 08:58 am

 

Published : 23 Jul 2021 07:13 AM
Last Updated : 23 Jul 2021 08:58 AM

மதுரை அரசு மருத்துவமனைக்கு கூடுதல் தடுப்பூசி ஒதுக்கப்படுமா? - அமைச்சர்கள் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் எதிர்பார்ப்பு

additional-vaccine

மதுரை

விழிப்புணர்வு இன்மையால் தடுப்பூசி செலுத்த அதிக அளவில் மக்கள் வராத நிலையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி கையிருப்பு 17 ஆயிரத் துக்கு மேல் உள்ளது. ஆனால், தடுப்பூசி செலுத்த ஏராளமானோர் வந்து செல்லும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் வெறும் 10 தடுப்பூசிகள் மட்டுமே கையிருப்பில் உள்ளன.

கரோனா தொற்றை முற்றிலும் கட்டுப்படுத்த தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணியை அரசு தீவிரப் படுத்தியுள்ளது. ஆனால், தடுப்பூசி பற்றாக்குறையால் மக்கள் சிரமம் அடைகின்றனர்.


மதுரை மாவட்டத்தில் இது வரை 7 லட்சத்து 2 ஆயிரத்து 789 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். மாவட்டத்தில் மொத்தம் 17,740 தடுப்பூசிகள் தற்போது கையிருப்பில் உள்ளதாக சுகாதாரத்துறை கூறியுள்ளது. ஆனால், அரசு ராஜாஜி மருத்து வமனையில் வெறும் 10 தடுப் பூசிகள் மட்டுமே இருப்பு உள் ளதாகக் கூறியுள்ளனர்.

அதேநேரத்தில் புறநகர் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 17,110 தடுப்பூசிகள் இருப்பில் உள்ளன.

மாவட்ட சுகாதார கிடங்குக்கு வரும் தடுப்பூசிகள், அரசு ராஜாஜி மருத்துவமனை, மற்ற அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தினமும் 200 தடுப்பூசிகள் என்ற அடிப்படையில் பிரித்து விநி யோகம் செய்யப்படுகிறது. இந்த அடிப்படையில் ஓர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ஒதுக்கும் தடுப்பூசிகளையே அரசு ராஜாஜி மருத்துவமனைக்கும் சுகாதாரத் துறை ஒதுக்குகிறது. அதனால், அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு வரும் தடுப்பூசிகள் உடனுக்குடன் தீர்ந்து போய்விடுகிறது. மக்களும் தினமும் வந்து தடுப்பூசி போட முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.

மாவட்ட ஆட்சியர் அறிவுறுத் தலின் பேரிலே அனைத்து மையங்களுக்கும் தினமும் 200 தடுப்பூசி ஒதுக்குவதாகக் கூறப் படுகிறது. அதனாலே அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு போதுமானதாக இல்லை எனக் கூறப்படுகிறது.

கிராமங்களில் போதிய விழிப் புணர்வு இன்மையால் தடுப்பூசி போட மக்கள் வராததால் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கையிருப்பு எண்ணிக்கை அதி கரித்து 17,110 தடுப்பூசிகள் கையி ருப்பில் உள்ளன.

அரசு ராஜாஜி மருத்துவ மனையில் அதிகமான மக்கள் வரும் நிலையில், ஒதுக்கப்படும் தடுப்பூசியோ மிகக் குறைவாக இருப்பதால் உடனடியாக தீர்ந்து போகிறது.

பற்றாக்குறையைப் பொருத்து அதிகம் தேவைப்படும் அரசு ராஜாஜி மருத்துவமனை போன்ற மையங்களுக்குக் கூடுதல் தடுப் பூசிகள் வழங்க அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் ஏற்பாடு செய்ய வேண்டும் என பொதுமக்கள், மருத்துவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.


மதுரைஅரசு மருத்துவமனைகூடுதல் தடுப்பூசிAdditional vaccineVaccineஅமைச்சர்கள்Covaxin

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x