Published : 23 Jul 2021 07:13 AM
Last Updated : 23 Jul 2021 07:13 AM

குடிசை மாற்று வாரியத்தில் காலியாக உள்ள 25 ஆயிரம் வீடுகளால் ரூ.2,500 கோடி வீண்: ஓபிஎஸ் மீது அமைச்சர் தா.மோ.அன்பரசன் குற்றச்சாட்டு

மதுரை புதூர் சிட்கோ தொழிற்பேட்டையில் தொழில் முனைவோருக்கு கடன் வழங்கிய அமைச்சர் தா.மோ.அன்பரசன். உடன் அமைச்சர் பி.மூர்த்தி.

மதுரை

அதிமுக ஆட்சியில் துணை முதல்வ ராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் பல்வேறு மாவட்டங்களில் குடிசை மாற்று வாரியம் சார்பில் 25 ஆயிரம் வீடுகளை கட்டி யாரையும் குடியமர்த்தாமல் ரூ.2,500 கோடி வீணடித்துள்ளதாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் குற்றம் சாட்டினார்.

மதுரை மாவட்டத்தில் குடிசை மாற்று வாரியம் சார்பில் கட்டப்பட் டுள்ள வீடுகளை ஊரகத் தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேற்று பார்வையிட்டார். பின்னர் மதுரை சிட்கோ வளாத்தில் தொழில் கடன் வழங்கினார். அப்போது அமைச்சர் பி.மூர்த்தி உடனிருந்தார்.

இதைத் தொடர்ந்து அமைச்சர் அன்பரசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மதுரை, தேனி மாவட்டங்களில் கட்டப்பட்டு வரும், கட்டி முடிக்கப் பட்டுள்ள குடிசை மாற்று வாரிய வீடுகளை ஆய்வு செய்தேன். அதிமுக ஆட்சியில் இத்துறை அமைச்சராக இருந்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தேனி, மதுரை, புதுக்கோட்டை, திருச்சி, திருப்பூர், கோவை ஆகிய மாவட்டங்களில் மட்டும் சுமார் 35 ஆயிரம் வீடுகளை கட்டித் தந்துள்ளார். ஆட்களே இல்லாத நிலையில், சிலர் பயன்படும் நோக்கத்தில் இவ்வீடுகள் கட்டப்பட்டுள்ளன. பயனாளிகளே குடியிருக்க முடியாமல் ஏராளமான வீடுகள் மூடப்பட்டுள்ளன.

மதுரை மாவட்டம் ராஜாக்கூரில் 2011-ம் ஆண்டு 1,566 வீடுகள் ரூ..47 கோடியில் கட்டப்பட்டுள்ளன. வைகை ஆற்றின் கரையில் உள்ள ஆக்கிரமிப்புகளை காலி செய்து, அங்கு வசிப்போரை ராஜாக்கூரில் குடியமர்த்துவதே இத்திட்டத்தின் நோக்கம். 10 ஆண்டுகளாக யாரையும் குடியேற்றாமல் திட்டத்தின் நோக்கமே சிதைந்துவிட்டது.

மதுரை உட்பட சில மாவட்டங் களில் மட்டும் 25 ஆயிரம் வீடுகளுக்கும் மேல் மக்களை குடியேற்றாமல் காலியாக வைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ஒரு வீட்டுக்கு ரூ.10 லட்சம் வீதம் ரூ.2,500 கோடி வரை செலவிடப்பட்டுள்ளது. சில ஒப்பந்ததாரர்கள் பயன்பெற வேண்டும் என்பதற்காக ரூ.2,500 கோடி வரை பாழாக்கப்பட்டுள்ளது.

சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு உதவ முதலீட்டு மானியம் ரூ.168 கோடியை உடனே வழங்க முதல்வர் நடவடிக்கை எடுத்துள்ளார். தமிழகம் முழுவதும் சீரான தொழில் வளத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் பல மாவட்டங்களில் 100 ஏக்கருக்கும் மேல் நிலத்தை கையகப்படுத்தி தொழிற்பேட்டைகளை ஏற்படுத்தவுள்ளோம் என்றார்.

முன்னதாக தேனி மாவட்டம் தப்புக்குண்டு, ஊஞ்சாம்பட்டி கிராமங்களில் நடந்து வரும் அனை வருக்கும் வீடு திட்டக் கட்டுமானப் பணிகளை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆய்வு செய்தார். எம்எல்ஏக்கள் என்.ராமகிருஷ்ணன் (கம்பம்), ஆ.மகாராஜன் (ஆண்டிபட்டி), கே.எஸ்.சரவணக்குமார் (பெரியகுளம்), ஆட்சியர் க.வீ.முரளி தரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x