Published : 23 Jul 2021 07:13 AM
Last Updated : 23 Jul 2021 07:13 AM

மதுரை ரேஸ்கோர்ஸ் அருகே அமைகிறது கலைஞர் நூலகம்: அமைச்சர் எ.வ.வேலு தகவல்

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த பொதுப்பணி, நெடுஞ்சாலைத் துறை ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர்கள் எ.வ.வேலு, பி.மூர்த்தி, அர.சக்கரபாணி, பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்டோர்.

மதுரை

மதுரை-நத்தம் சாலையில் ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள பொதுப் பணித்துறைக்கு சொந்தமான 4 ஏக்கர் இடத்தில் கலைஞர் நூலகம் கட்டப்படும் என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்ட பொதுப்பணி, நெடுஞ்சாலைத்துறை பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நேற்று நடந்தது. அமைச்சர்கள் எ.வ.வேலு, அர.சக்கரபாணி, பி.மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் ஆகியோருடன் 5 மாவட்ட ஆட்சியர்கள், பொதுப்பணி, நெடுஞ்சாலைத்துறை அலுவலர் கள் பங்கேற்றனர்.

இக்கூட்டத்துக்குப் பின் அமைச்சர் எ.வ.வேலு செய்தி யாளர்களிடம் கூறியதாவது: ரூ.70 கோடியில் அமையும் கலைஞர் நூலகத்துக்காக மதுரையில் ஏற்கெனவே ஆய்வு செய்யப்பட்ட இடங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. தற்போது புதிய இடம் தேர்வு செய்யப் பட்டுள்ளது. மதுரை- நத்தம் சாலையில் ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 4 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இப்பகுதியில் ஆட்சியர் இல்லம், காவல், பொதுப்பணி, நீதித்துறை சார்ந்த உயர் அலுவலர்களின் அலுவலகங்கள், இல்லங்கள் என முக்கிய பகுதியாக திகழ்கிறது. பல்வேறு முக்கிய அலுவலகங்கள், இல்லங்கள் உள்ளதால் நூலகம் அமைக்க பொருத்தமானதாக உள்ளது. முதல்வரிடம் ஒப்புதல் பெற்றதும் விரைவில் கட்டுமான பணிகளை தொடக்குவோம்.

பழநி-கொடைக்கானல் சாலையை தேசிய நெடுஞ்சாலை யில் இணைக்கவும், தரம் உயர்த்த வும் நடவடிக்கை எடுக்கப்படும்.

கொடைக்கானல்-மூணாறு இடையே சாலை அமைக்க கேரள அரசுடன் பேசி தீர்வு காண்போம். தமிழர்களின் அடையாளமான கீழடி அகழாய்வு இடத்துக்கு செல்லும் சாலையும் தரம் உயர்த்தப்படும். தமிழக அரசின் தலைமைச் செயலர் அறி வித்துள்ள சாலையின் உயரம் அதிகரிக்கப்படாது என்ற அறி விப்பு குடியிருப்பு பகுதிகள், நகர் பகுதிகளுக்கு மட்டுமே பொருந் தும். மற்ற பகுதிகளில் சாலை உயரம் அதிகரிப்பால் பாதிப்பு ஏற்படாது.

கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் பாலங்கள் கட்டுவதில் தென் மாவட்டங்கள் வஞ்சிக்கப்பட்டுள்ளன. இக் குறையை தீர்க்க முதல்வர் உத்தர விட்டுள்ளார். மதுரைக்கு விரைவில் 3 புதிய பாலங்கள் கட்ட திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது.5 ஆண்டுக்குள் நிதி நிலையை சீர் செய்வோம். குடும்ப பெண்களுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் நிச்சயம் செயல்படுத்தப்படும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x