விவசாயிகளுக்கு இந்த ஆண்டு ரூ.11,500 கோடி கடன் வழங்க இலக்கு: அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்

அமைச்சர் ஐ.பெரியசாமி
அமைச்சர் ஐ.பெரியசாமி
Updated on
1 min read

கூட்டுறவு சங்கங்களின் மூலம் தமிழக விவசாயி களுக்கு இந்த ஆண்டு ரூ.11,500 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக் கப்பட்டுள்ளது என்று அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உழவர் கருத்து கேட்புக் கூட்டம் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் நடைபெற்றது. ஆட்சியர் க.வீ.முரளிதரன், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் ஆ.சண்முகசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டுறவுத் துறை சார்பில் 147 பேருக்கு ரூ.58.11லட்சம் கடனுதவியை அமைச்சர் இ.பெரியசாமி வழங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தட்டுப்பாடின்றி உரம் வழங்கப்பட்டு வருகிறது. வாழை உள்ளிட்ட பயிர்களுக்கும் கூடுதலாக கடன் கேட்பு கோரிக்கை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்.

தமிழகத்தில் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும். ரேஷன் பொருட்களை கடத்து பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தரம் குறைந்த அரிசியை ரேஷன் கடைகளில் வழங்கக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களின் மூலம் ரூ.9,500 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ரூ.11,500 கோடி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக ரூ.2,500 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in