

கொற்கையில் நடைபெற்று வரும் அகழாய்வுப் பணியில் பழமையான 7 அடுக்கு செங்கல் கட்டுமானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் ஆதிச்சநல்லூர், சிவகளை மற்றும் கொற்கையில் தமிழக தொல்லியல் துறை சார்பில், அகழாய்வு பணிகள்நடைபெற்று வருகின்றன.
கொற்கையில் 75 ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த பிப்ரவரி 26-ம் தேதி மீண்டும்அகழாய்வுப் பணி தொடங்கியுள்ளது.
கொற்கை ஊரின் மையப்பகுதியில் 17 குழிகள் அமைக்கப்பட்டு, அகழாய்வு இயக்குநர் தங்கதுரை தலைமையில் 4 மாத காலமாக இப்பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பழமையான பொருட்கள் தொடர்ந்து கிடைத்து வருகின்றன. திரவப்பொருட்களை வடிகட்டும் 4 அடுக்கு கொண்ட சுடுமண்குழாய் கடந்த வாரம் கண்டுபிடிக்கப்பட்டது.
தற்போது, மற்றொரு குழியில் சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்புசங்க காலத்தில் பயன்படுத்திய 7 அடுக்கு கொண்ட செங்கல் கட்டுமானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொல்லியல் ஆய்வாளர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து அதேகுழியில்இரும்பு, உருக்கு, கண்ணாடி மணிகள் மற்றும் வாழ்விட பகுதிகளைஉறுதிப்படுத்துவதற்கான அமைப்புகளும் காணப்படு கின்றன.
தொடர்ந்து பல்வேறு பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருவதால் தொல்லியல் ஆய்வாளர்கள் உற்சாகமாக பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இப்பணிகள் செப்டம்பர் வரை நடைபெற உள்ளன.