

தமிழக சட்டப் பேரவையிலிருந்து 6 தே.மு.தி.க எம்.எல்.ஏக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பு குறித்து தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
வைகோ (மதிமுக பொதுச் செயலாளர்)
இந்த தீர்ப்பு ஜனநாயகத்துக்கு கிடைத்த வேற்றி. எம்.எல்.ஏக் களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளது, விதிமுறை கள் மீறப்பட்டுள்ளன என உச்ச நீதிமன்றம் தனது தீர்ப் பில் சுட்டிக்காட்டியுள்ளது. சட்டப்பேரவையில் ஜனநாயக படுகொலை நடத்தியதற்கும், ஆளுங்கட்சியினரின் எதேச்சாதி காரத்துக்கும் நீதிமன்றம் சவுக்கடி கொடுத்துள்ளது.
ஜி.ராமகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர்)
வரவேற்கத்தக்க தீர்ப்பு இது. சீர்குலைக்கப்பட்ட சட்டமன்ற ஜனநாயகத்தை மீட்டெடுப்பதில் இந்த தீர்ப்பு முக்கியப் பங்கு வகிக்கும். மேல்முறையீடு செய்து காழ்ப்புணர்ச்சியை காட்டாமல், உச்ச நீதிமன்ற உத்தரவை உடனடியாக அதிமுக அரசு அமல்படுத்த வேண்டும்.
இரா.முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர்)
தே.மு.தி.க எம்.எல்.ஏக்கள் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றிட முனைந்தபோது 6 பேரை பேரவைத் தலைவர் இடைநீக்கம் செய்தார். உச்ச நீதிமன்ற தீர்ப்பின் மூலம் ஜனநாயகம் காப்பாற்றப்பட்டு 6 எம்.எல்.ஏக்கள் கடமையை நிறைவேற்ற அனுமதி கிடைத்துள்ளது. ஜன நாயக விரோத செயலில் யார் ஈடுபட்டாலும் வெற்றி பெற இயலாது என்பதை இந்த தீர்ப்பு நிரூபித்துள்ளது.