

கால்நடைகளிடம், குறிப்பாக நாய்களிடம் கெனைன் பார்வோ வைரஸ்தொற்று வேகமாக பரவி வருகிறது.பார்வோ வைரஸ் தொற்று ஏற்பட்ட நாய்கள் சோர்வுடன் இருப்பதுடன், வாந்தி, ரத்தம் கலந்த வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சினைகளும் ஏற்படுகிறது. உடனடியாக சிகிச்சை அளிக்கவில்லை என்றால் நோயின் தீவிரத்தால் நாய்கள் உயிரிழக்க வாய்ப்புள்ளது. தடுப்பூசி செலுத்தினால், அந்நோய் பாதிப்பில் இருந்து நாய்களை பாதுகாக்கலாம்.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாககரோனா தொற்று காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பெரும்பாலானோர் தங்களது செல்லப் பிராணிகளுக்கு ரேபிஸ் மற்றும் பார்வோ வைரஸ் தடுப்பூசிகளில் சில தவணைகள் செலுத்தாமல் உள்ளனர்.இதுவே, பார்வோ வைரஸ் பாதிப்புஅதிகரிக்கக் காரணம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுதொடர்பாக கால்நடை மருத்துவர்கள் கூறியதாவது:
பார்வோ வைரஸ் பெரும்பாலும் மழைக் காலங்களில் வேகமாக பரவும். ஜூன், ஜூலை, நவம்பர்,டிசம்பர், ஜனவரியில் அதன் தாக்கம்அதிகமாக இருக்கும். அந்த காலகட்டத்தில் சென்னையில் தினமும் 130 முதல் 150 நாய்கள் வரை இந்தவைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு கொண்டு வரப்படுகிறது. தற்போது இந்த எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. இதற்கு, முறையாக தடுப்பூசிகள் செலுத்தாததே முக்கிய காரணம். பார்வோ வைரஸ் தடுப்பூசி விலை ரூ.300-க்கும் மேல் உள்ளது. இதனால், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் தடுப்பூசிகளை தங்களது செல்லப் பிராணிகளுக்கு போடவில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.