திருப்பூர் அரசு மருத்துவமனையில் படுக்கைகள் பற்றாக்குறை: ஓய்வறையில் தங்கும் பொது நோயாளிகள்

திருப்பூர் அரசு மருத்துவமனையில் படுக்கைகள் பற்றாக்குறை: ஓய்வறையில் தங்கும் பொது நோயாளிகள்
Updated on
1 min read

திருப்பூர் அரசு மருத்துவமனையில் படுக்கை வசதி இல்லாததால், மருத்துவமனை வளாகத்திலேயே பொது நோயாளிகள் தங்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

திருப்பூர்- தாராபுரம் சாலையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை நம்பி, மாவட்டத்தில் லட்சக்கணக்கான தொழிலாளர்களும், பொதுமக்களும் உள்ளனர். கரோனா தொற்று தீவிரமான நிலையில், திருப்பூர் அரசு மருத்துவமனையில் கூடுதலாக கரோனா படுக்கைகள் வசதி ஏற்படுத்தப்பட்டது. இதனால் பொது நோயாளிகளுக்கு அவசர சிகிச்சை மட்டும் அளிக்கப்பட்டது.பொது வார்டுகளும் கரோனா வார்டுகளாக மாற்றப்பட்டு, அங்கு சிகிச்சை பெற்றவந்த பலரையும் வீடுகளுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர். ஆனால் உறவினர்கள் இல்லாத பலரும் படுக்கை கிடைக்காததால், மருத்துவமனை வளாகத்தில் உள்ளஓய்வறையில் தங்கியுள்ளனர். இது, நோயாளிகளுடன் வரும் உறவினர்கள் தங்குவதற்காக ஏற்படுத்தப்பட்ட அறையாகும்.

இதுகுறித்து நோயாளிகள் கூறியதாவது: அறுவை சிகிச்சை செய்த நோயாளிகள் பலரும், திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தோம். கரோனாபாதிப்பு அதிகமாக இருந்த காலகட்டத்தில் கரோனா வார்டுகளாக, பல வார்டுகள் மாற்றப்பட்டன. இதனால் எங்களை வீடுகளுக்குசெல்லுமாறு அறிவுறுத்தினர்.ஆனால் எங்களுக்கு வீடுகளோ,உறவினர்களோ இல்லை. தற்போதுகரோனா தொற்று குறைந்த நிலையிலும், பொது வார்டுகளில் எங்களை சிகிச்சை பெற இன்னமும் அனுமதிக்கவில்லை. படுக்கைவசதி இல்லாததால், இங்கேயே தங்கவேண்டிய நிலையுள்ளது. எங்களுக்கு தேவையான படுக்கை வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க அரசு மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரி வித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in