Published : 22 Jul 2021 03:14 AM
Last Updated : 22 Jul 2021 03:14 AM

நிதியில்லாமல் ஏன் புதிய சட்டப்பேரவை கட்ட வேண்டும்? - புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் கேள்வி

புதுச்சேரியில் தற்போது நிதி பற்றாக்குறை உள்ள சூழலில், மாநில அரசின் நிதியை செலவு செய்யாமல் சட்டப்பேரவைக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும். நிதி இல்லாவிட்டால் தற்போது உள்ள பழைய இடத்திலேயே சட்டப்பேரவை தொடர வேண்டும் என்று புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் ஏ.வி. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

முக்கியமானவர்களின் செல் போன்களை, சட்டவிரோதமாகவும், அரசியலமைப்பக்கு எதிராகவும் ஹேக்கிங் செய்ததை வெளிப் படுத்தும் அதிர்ச்சி செய்தி, தேசிய பாதுகாப்புக்கு பாஜகவினர் துரோகம் செய்துள்ளதை வெளிப் படுத்துகின்றன.

இஸ்ரேலிய கண்காணிப்பு மென்பொருளான ‘பெகாசஸ்’ மூலம்இந்தியாவின் பாதுகாப்பு இயந் திரங்களை, செல்போன்களைக் கண்காணிப்பது மற்றும் ‘ஹேக்கிங்’ செய்வது தேசத்துரோகம்.

உள்துறை அமைச்சர் அமித்ஷா, பிரதமர் நரேந்திர மோடி தான் இதற்கு பொறுப்பு. பெகாசஸ் தொலைபேசி ஹேக் ஊழல் தொடர்பாக உச்சநீதிமன்றத்தால் கண்காணிக்கப்படும் நீதித்துறை விசாரணையை அமைக்கக்கோரி புதுச்சேரியில், 22-ம் தேதி (இன்று), ஆளுநர் மாளிகை நோக்கி ஒரு பேரணியை இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி நடத்துகிறது.

புதுவையில் புதிய சட்டப் பேரவை கட்ட வேண்டும் என பல்வேறு அரசுகள், பல இடங்களில் அடிக்கல் நாட்டி பூமிபூஜை செய் தன, ஆனால் எந்த அரசும் சட்டப்பேரவை கட்டிடத்தை கட்டி முடிக் கவில்லை. தற்போது அமைந்துள்ள புதிய அரசு தட்டாஞ்சாவடியில் சட்டப்பேரவை கட்டிடம் கட்டுவதாக அறிவித்துள்ளது.

ஆனால் இதற்காக நிலம் எதுவும் கையகப்படுத்தப்படவில்லை. கடந்த காலத்தில கையகப் படுத்தப்பட்ட நிலத்தையும் கைவிட்டு விட்டதாக தெரிகிறது. இதனால் புதிய இடத்தில் தான் கட்டுவார்களோ என்ற எண்ணம் தோன்றுகிறது,

புதுவை அரசு தற்போது பல்வேறு நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. அரசு நிறுவன ஊழியர்களுக்கு ஊதியம் போட முடியவில்லை. திட்டங்களை செயல்படுத்த முடியாத நிலை உள்ளது. மாநில அரசின் கடனுக்கு வட்டி, அபராத வட்டி, கடன் ஆகியவற்றை திருப்பி செலுத்தி வருகிறோம். எனவே, நாடாளுமன்ற நிதி புதுவைக்கு கிடைக்குமா என்ற சந்தேகம் உள்ளது. எனவே மாநில அரசின் நிதியை செலவு செய்யாமல் சட்டப்பேரவை கட்டிடம் கட்ட வேண்டும். நிதி இல்லாவிட்டால் தற்போது உள்ள பழைய இடத்திலேயே சட்டப்பேரவை தொடர வேண்டும் என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x