

மதுரையில் இரு சக்கர வாகன `பார்க்கிங்' கட்டணம் ரூ.10 ஆக உயர்த்தப்பட்டதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மதுரை மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம் பஸ் நிலைய வாகனக் காப்பகங்களில் 12 மணி நேரத்துக்கு வாகனங்களை நிறுத்த ஜிஎஸ்டியோடு ரூ.6 வசூ லிக்கப்பட்டது. இந்நிலையில், திடீரென ரூ.10 ஆக கட்டணம் உயர்த்தப்பட்டது. இதற்கு பொது மக்களிடம் எதிர்ப்புக் கிளம்பியுள் ளது. வாகனக் காப்பகங்களில் பைக்குகள் திறந்த வெளியில்தான் நிறுத்தப்படுகின்றன. அப்படி இருக்கும்போது கட்டண உயர்வை ஏற்க முடியாது என மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
இது குறித்து சமூக ஆர்வலர் ஹக்கீம் கூறுகையில், ‘இதுவரை இரு சக்கர வாகனங்களுக்கு 12 மணி நேரத்துக்கு ரூ.6-ம் 24 மணி நேரத்துக்கு ரூ.12 மட்டுமே வசூலித்தனர். தற்போது 12 மணி நேரத்துக்கு ரூ.10 கட்டணமாக நிர்ணயம் செய்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.
ஊரடங்கால் ஏற்கெனவே பலர் வேலையின்றி வருமானம் இழந் துள்ளனர். இந்த நெருக்கடிக்கு மத்தியில் வாகனங்களை நிறுத்த கட்டணம் ரூ.10 என்பது மிகவும் அதிகமாகும்.
பொருளாதார நெருக்கடியான காலத்தில் மாநகராட்சி நிர்வாகம் இரு சக்கர வாகனங்களுக்கு பார்க்கிங் கட்டணம் அதிகரிப்பது நியாயமில்லை என்றார்.
மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘மாட்டுத்தாவணி பழ மார்க்கெட் வாகன நிறுத்து மிடத்தில் கட்டணம் ரூ.7 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
மாட்டுத்தாவணி, ஆரப் பாளையம் பஸ் நிலையங்களில் மாநகராட்சி புதிதாக நிர்ணயித்த ரூ.10 கட்டணமாக வசூலிக்கப் படும்,’ என்றனர்.