

பத்திரப்பதிவுத்துறை ஓரிரு மாதங் களில் எளிமையாக்கப்படும் என அமைச்சர் பி. மூர்த்தி தெரிவித்தார்.
நடிகர் சிவாஜிகணேசனின் 20-வது நினைவு நாளை முன்னிட்டு மதுரை மாவட்ட நீதிமன்றம் அருகே உள்ள அவரது சிலைக்கு அமைச்சர் பி.மூர்த்தி நேற்று மாலை அணிவித்தார்.
பின்னர் அவர் செய்தியாளர் களிடம் கூறியதாவது:
பதிவுத் துறையில் ஊழல், தவறுகள் குறித்து மக்கள் தாரா ளமாக புகார் அளிக்கலாம். இதற்காக 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. இங்கு வரும் புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
ஓரிரு மாதங்களில் பதிவுத்துறை முழுமையாகச் சீரமைக்கப்படும். மக்கள் எளிமையாக பத்திரப் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப் படும் என்றார்.
சிவாஜி மன்றப் புரவலர் வள்ளியப்பன், எம்எல்ஏ-க்கள் கோ.தளபதி, பூமிநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும் சிவாஜி சிலைக்கு மரியாதை செலுத்தினர்.
மதச்சார்பற்ற ஜனதா தளம்
மதச்சார்பற்ற ஜனதா தளம் மாநிலச் செயலாளர் எஸ்.எம்.செல்லப்பாண்டி சிவாஜி சிலைக்கு மாலை அணிவித்தார். நகர் தலைவர் என்.எஸ்.கே.நாகேந் திரன் தலைமை வகித்தார். தொகுதி தலைவர்கள்ஜெயப்பிரகாசம், பி.சேகர், மீனாட்சிசுந்தரம் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். கைத்தறி பிரிவுத் தலைவர் ரவீந்திரன் நன்றி கூறினார்.