Published : 22 Jul 2021 03:14 AM
Last Updated : 22 Jul 2021 03:14 AM

அமமுக அமைப்பு ரீதியாக ராமநாதபுரம் மாவட்டம் பிரிப்பு: பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் அறிவிப்பு

ராமநாதபுரம் மாவட்டத்தில் அமமுக கட்சி பணிகளை அந்த மாவட்டம் அமைப்பு ரீதியாக 2 ஆகப் பிரிக்கப்பட்டு, மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர்.

இதுகுறித்து அக்கட்சி பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்ட அறிக்கை:-

அமமுக ராமநாதபுரம் மாவட்டக் கட்சிப் பணிகளை விரைவுபடுத்தும் வகையில் அமைப்பு ரீதியாக ராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் மற்றும் ராமநாதபுரம் மேற்கு மாவட்டம் என இரு மாவட்டங்களாகப் பிரிக்கப்படுகிறது.

இதில், ராமநாதபுரம் கிழக்கு மாவட்டத்தில் ராமநாதபுரம் மற்றும் திருவாடானை சட்டப் பேரவைத் தொகுதிகளும், ராம நாதபுரம் மேற்கு மாவட்டத்தில் முதுகுளத்தூர் மற்றும் பரமக்குடி சட்டப்பேரவைத் தொகுதிகளும் இடம்பெறும்.

ராமநாதபுரம் கிழக்கு மாவட்டச் செயலாளராக ஜி.முனியசாமி (கட்சியின் அமைப்புச் செய லாளர்), ராமநாதபுரம் மேற்கு மாவட்டச்செயலாளராக எம்.முருகன் (முன்னாள் எம்.எல்.ஏ.) நியமிக்கப்படுகின் றனர்.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்டச் செயலாளர்களுக்கு கட்சியினர் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று டிடிவி.தினகரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x