Published : 05 Feb 2016 09:06 AM
Last Updated : 05 Feb 2016 09:06 AM

அதிகாலையில் மது போதையில் அதிவேகமாக கார் ஓட்டி விபத்து; இளைஞர் பலி- அண்ணா சாலையில் அதிகாலையில் நடந்த சம்பவம்

சென்னை ராயபுரம் காசி தோட்டம் பகுதியை சேர்ந்தவர் கவின்ராஜ் (25). கிண்டியில் ஒரு ஸ்டார் ஓட்டலில் பணிபுரிந்தார். வேலை முடிந்து நேற்று அதிகாலை 3 மணியளவில் மோட்டார் சைக் கிளில் வீட்டுக்கு புறப்பட்டார். அண்ணா சாலை டிவிஎஸ் சிக்னல் அருகே கவின்ராஜ் வந்தபோது எதிரே ஒரு சொகுசு கார் அதிவேகமாக வந்தது. கவின்ராஜ் சுதாரிப்பதற்குள் அந்த கார் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் பல அடி உயரத்துக்கு தூக்கி வீசப்பட்டார். மெட்ரோ ரயில் பணிக்காக சாலையில் வைக்கப்பட்டிருந்த தடுப்பு கம்பி கவின்ராஜ் வயிற்று பகுதியில் குத்தி அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்தார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

அதன் பிறகும் வேகம் குறையாக கார் எதிரே வந்த ஒரு மினி லாரி, கார் மீது அடுத்தடுத்து மோதியது. இதில் லாரியின் சக்கரங்கள் தனியாக கழன்று, லாரி சாலையில் கவிழ்ந்தது. அதிலிருந்த காய்கறிகள் மற்றும் பிளாஸ்டிக் டப்பாக் கள் சாலையில் சிதறின. விபத்து நடந்த பின்னர் காரில் இருந்து 2 பேர் மது போதையில் வெளியே வந்தனர். பொதுமக்கள் அவர்களை பிடித்து வைத்து போலீஸுக்கு தகவல் தெரிவித்தனர்.

அண்ணா சதுக்கம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஷேக்பாபு சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார். பலியான கவின்ராஜின் உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத் துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். விபத்தை ஏற்படுத் திய இருவரையும் பிடித்து காவல் நிலையம் அழைத்து சென்று நடத்திய விசாரணையில் ஈரோட்டை சேர்ந்த முகமது சபீக்(31), முகமது பாரூக்(39) என்பது தெரியவந்தது. இவர்கள் தோல் பொருட்களை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யும் தொழில் செய்து வருகின்றனர். நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடந்து வரும் கண்காட்சியில் முகமது சபீக் நிறுவனத்தின் ஸ்டால் வைக்கப்பட்டுள்ளது. இதற்காக சென்னை வந்த சபீக், தனது நண்பர் முகமது பரூக் (39), என்பவருடன் அண்ணா சாலை ஸ்பென்சர் பிளாசா எதிரே உள்ள ஹோட்டலில் தங்கியிருந்தார்.

நேற்று அதிகாலை 3.30 மணியளவில் கண்காட்சிக்கான ஏற்பாடுகளை பார்ப்பதற்காக இருவரும் அண்ணா சாலையில் இருந்து வர்த்தக மையம் நோக்கி காரில் புறப்பட்டு சென்றனர். அப்போது, முகமது சபீக், பாரூக் ஆகிய இருவரும் குடிபோதையில் இருந்தனர்.

தற்போது மெட்ரோ ரயில் பணிக்காக அண்ணா சாலையில் குறிப்பிட்ட தூரம் வரை ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டுள்ளது. எனவே, அவர்கள் தங்கியிருந்து ஹோட்டலில் இருந்து வாகனங் கள் எக்ஸ்பிரஸ் அவென்யூ மால் அமைந்துள்ள சாலை வழியாகத்தான் செல்ல வேண் டும். ஆனால் இவர்கள் ஒன்வே யில்(ராங் ரூட்டில்) அண்ணா சாலையில் சென்று விபத்தை ஏற்படுத்தி உள்ளனர். விபத்து ஏற்பட்டதும் சொகுசு காரில் இருந்த 'ஏர்பேக்' விரிந்துவிட்ட தால் காரில் இருந்த இருவருக் கும் சிறு காயம் கூட ஏற்படவில்லை.

காரை ஓட்டிய முகமது சபீக், முகமது பாரூக் ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்தனர். இவர்கள் மீது கொலை வழக்குக்கு சமமான 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 2 பேரை யும் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை அழைத் துச் சென்று மது குடித் துள்ளனராக என சோதனை நடத்திவிட்டு புழல் சிறையில் அடைத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x