ஓபிசி பிரிவினருக்கு சான்றிதழ் வழங்க பெற்றோரின் வருமானத்தை கணக்கிட வேண்டாம்: மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு அறிவுரை

ஓபிசி பிரிவினருக்கு சான்றிதழ் வழங்க பெற்றோரின் வருமானத்தை கணக்கிட வேண்டாம்: மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு அறிவுரை
Updated on
1 min read

ஓபிசி வகுப்பினருக்கு சான்றிதழ் வழங்கும்போது பெற்றோரின் ஆண்டு வருமானத்தில் ஊதியம் மற்றும் விவசாய வருமானத்தை கணக்கில் கொள்ளாமல் தாமதமின்றி சான்றிதழ் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது,

இதுதொடர்பாக தமிழக அரசின்பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை முதன்மை செயலர் ஆ.கார்த்திக், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

மத்திய அரசு பணிகளிலும், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களிலும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓபிசி) வளமான பிரிவினரை நீக்கி 27 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது.

அந்த வகையில், வளமான பிரிவினரை நீக்க நிர்ணயிக்கப்பட்டுள்ள வருமான வரம்பை (ஆண்டு வருமானம் ரூ.8 லட்சம்) ஊதியம் மற்றும்விவசாய வருமானத்தை சேர்க்கக்கூடாது என வழிகாட்டு நெறிமுறையில் விளக்கப்பட்டுள்ளது.

எனவே, மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ஓபிசி வகுப்பினருக்கு சான்றிதழ் வழங்குமாறு மாவட்ட ஆட்சியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். சான்றிதழ் வழங்கும்போது பெற்றோரின் ஆண்டு வருமானத்தில்ஊதியம் மற்றும் விவசாய வருமானத்தை கணக்கில்கொள்ளாமல் எவ்வித தாமதமின்றி ஓபிசி சான்றிதழ் வழங்குமாறு சம்பந்தப்பட்ட வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு தகுந்த அறிவுரைகள் அளிக்குமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in