

சோழிங்கநல்லூர் சட்டப்பேரவை தொகுதி, பரங்கிமலை கிழக்கு ஒன்றியம், கோவிலம்பாக்கம் ஊராட்சி நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள், ஆலோசனைக் கூட்டம்நடைபெற்றது. இதில் அதிமுகஇலக்கிய அணி செயலாளர் பா.வளர்மதி பங்கேற்று உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற ஆற்ற வேண்டிய களப்பணிகள் குறித்து விளக்கி பேசினார்.
நிகழ்ச்சியில் சென்னை புறநகர் மாவட்ட செயலாளர் கே.பி.கந்தன், அம்மா பேரவை துணை செயலாளரும், ஒன்றிய செயலாளருமான பெரும்பாக்கம் இ.ராஜசேகர், மாணவரணி மாநில துணை செயலாளர் சி.மணிமாறன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக வெற்றி பெற அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும். ஒரே வார்டில் பலர் போட்டியிடாமல் ஒற்றுமையுடன் செயல்பட்டு கழகத்தின் சார்பில் அறிவிக்கும் வேட்பாளரை வெற்றிபெறச் செய்ய வேண்டும். ஆட்சிஇல்லையே என்று எண்ணி இருக்காமல், மக்கள் பிரச்சினைகள் எதுவாக இருந்தாலும் உடனடியாகஅதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு சென்று தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆலோசனை வழங்கப்பட்டது.