Published : 21 Jul 2021 03:15 AM
Last Updated : 21 Jul 2021 03:15 AM

தே.கல்லுப்பட்டி அருகே 10-ம் நூற்றாண்டு மகாவீரர் சிற்பம் கண்டெடுப்பு

மதுரை

மதுரை மாவட்டம், தே.கல்லுப்பட்டி அருகே கி.பி. 10-ம் நூற்றாண்டு மகாவீரர் சிற்பம் சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

தே.கல்லுப்பட்டி அருகே வேளாம்பூரில் பழமையான சிற்பம் இருப்பதாக கவசக்கோட்டை விவசாயி ராதாகிருஷ்ணன், மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரி வரலாற்றுத்துறை உத விப் பேராசிரியரும், பாண்டி யநாடு பண்பாட்டு மைய தொல்லியல் ஆய்வாளருமான து.முனீஸ்வரனிடம் தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து உதவி பேராசிரியர் து.முனீஸ்வரன் தலைமையில் தொல்லியல் ஆர் வலர்கள் நாகபாண்டி, சிவக்குமார் ஆகியோர் வேளாம்பூர் மாரி யம்மன் கோயில் பின்புறம் கள ஆய்வு செய்தபோது 1000 ஆண்டுகள் பழமையான 24-வது தீர்த்தங்கரர் மகாவீரர் சிற்பம் கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து உதவிப் பேராசிரியர் து.முனீஸ்வரன் கூறியதாவது:

பிழைப்பு தேடி ஊரை விட்டு மக்கள் இடம் பெயர்ந்ததால் அரசாங்கப் பதிவேட்டில் மட்டுமே உள்ள கிராமம் வே ளாம்பூர். இக்கிராமத்தில் அடர்ந்த முட்புதரில் சிதைந்த நிலை யில் 3 அடி உயரம், 2 அடி அகலமுடைய சிலை உள்ளது. இது வர்த்தமானர் எனும் சமண சமயத்தின் 24-வது தீர்த்தங்கரரான மகாவீரர், ஆடையின்றி தியான கோலத்திலும், நீண்ட துளை யுடைய காதுகள், முகம் தெளிவற்று தேய்ந்த நிலையிலும், விரிந்த மார்புடனும் உள்ளது.

3 சிங்கங்கள் உள்ள பீடத்தின்மீது சிம்மாசனத்தில் அர்த்தபரியங்கா ஆசனத்தில் யோகமுத்திரையுடன் தியானக்கோலத்தில் சிற்பம் வடி வமைக்கப்பட்டுள்ளது.

தலையின் பின்புறம் முக்கா லத்தையும் உணர்த்தும் ஓளிவீசும் பிரபா வளையமும், மேற்பகுதியில் முக்குடையும், பின்புலத்தில் குங்கிலிய மரமும், சிற்பத்தின் பக்கவாட்டில் சித்தாக்கியா இயக் கியும், இயக்கன் மாதங்கனும் சாமரத்துடன் உருவங்கள் உடைந்த நிலையில் காணப்படுகிறது.

சமீபத்தில் செங்கமேடு பகுதியில் கண்டறிந்த மகாவீரர் சிற்பமும் இச்சிற்பமும் ஒப்பீட்டின்படி கி.பி.10-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இப்பகுதியிலும் ஒரு சமணப்பள்ளி பழங்கால மக்களின் வழிபாட்டிலிருந்து அழிந்ததை அறிய முடிகிறது. இவ்வூர் அரு கிலுள்ள காரைக்கேணியில் ஒரு தீர்த்தங்கரர் சிற்பம் உள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x