நதிநீர் இணைப்பு திட்டம் உடனே தொடங்க வேண்டும்: கொமதேக மாநாட்டில் வலியுறுத்தல்

நதிநீர் இணைப்பு திட்டம் உடனே தொடங்க வேண்டும்: கொமதேக மாநாட்டில் வலியுறுத்தல்
Updated on
1 min read

நதிநீர் இணைப்பு திட்டத்தை மத் திய அரசு விரைவாக தொடங்க வேண்டும் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஈரோடு மாவட்டம், சித்தோட்டில் கொமதேக மத்திய மண்டல மாநாடு நேற்று நடந்தது. அவைத் தலைவர் பி.ஆர்.டி.சென்னியப்பன் தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் முன்னிலை வகித்தார்.

மாநாட்டில், விவசாய நிலங் களில் எரிவாயு குழாய் அமைக் கும் கெயில் நிறுவனத்தின் பணி களுக்கு தடை விதித்து விவசாயி களை காக்க மத்திய, மாநில அரசு கள் நடவடிக்கை எடுக்க வேண் டும். அனைத்து நீர்நிலைகள், நீர்வழிப்பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவ தோடு, புதிய ஏரி, குளங்களை உருவாக்க வேண்டும்.

பாண்டியாறு-புன்னம்புழா, ஆனைமலையாறு-நல்லாறு, அவி நாசி-அத்திக்கடவு, கவுசிகா நதி, நொய்யலாறு, உப்பாறு மேட்டூர் உபரிநீர் கால்வாய் திட்டங்களை நிறைவேற்றுவதோடு, பிரதமரின் கனவு திட்டமான நதிநீர் இணைப்பு திட்டத்தை மத்திய அரசு விரைவாக தொடங்க வேண்டும்.

கரும்பு டன்னுக்கு ரூ.4 ஆயிரம் ஆதார விலை நிர்ணயம் செய்ய வேண்டும். விசைத்தறிக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும்.

நீண்ட நாட்களாக நடைமுறை யில் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்றவும், லாரி தொழிலை காக்க தனி நலவாரியம் அமைக்கவும், கூட்டுறவு ஜவ்வரிசி ஆலைகள் அமைக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நொய்யல் சாயக்கழிவு நீரால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு அறிவித்த நிவாரணத் தொகையை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 25 தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in