காய்கறிகளை சுலபமாக ஏற்றி வருவதற்காக உழவர் சந்தை விவசாயிகளுக்கு விரைவில் பேருந்து வசதி: வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் உறுதி

வேலூர் டோல்கேட் பகுதியில் உள்ள உழவர் சந்தையில் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் நேற்று ஆய்வு செய்து விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். படம்: வி.எம்.மணிநாதன்.
வேலூர் டோல்கேட் பகுதியில் உள்ள உழவர் சந்தையில் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் நேற்று ஆய்வு செய்து விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். படம்: வி.எம்.மணிநாதன்.
Updated on
1 min read

வேலூர் மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைகளுக்கு காய்கறிகள் ஏற்றிவர பேருந்து வசதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்தார்.

வேலூர் டோல்கேட் பகுதியில் உள்ள உழவர் சந்தையில் உள்ள 138 கடைகளில் விவசாயிகள் சில்லறை வணிகம் செய்து வருகின்றனர். இங்கு, தினசரி சுமார் 30 ஆயிரம் கிலோ எடையுள்ள காய்கனி மற்றும் கீரை வகைகள் விற்பனையாகி வருகின்றன.

இந்நிலையில், டோல்கேட் உழவர் சந்தையில் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, விவசாயிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள கடைகள் மற்றும் பொருட்கள் வாங்க வரும் பொதுமக்களுக்கு செய்யப்பட்ட வசதிகள் குறித்து அவர் கேட்டறிந்தார். அப்போது, மாற்றுத்திறனாளி ஒருவரின் கோரிக்கையை ஏற்று அவருக்கு ஒரு கடையை அங்கு ஒதுக்கீடு செய்யுமாறு அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.

பொதுமக்களின் வசதிக்காக உழவர் சந்தையில் சில மாற்றங் களை செய்யவும் அவற்றை வரும் 10 நாட்களில் முடிக்கவும் அதிகாரி களுக்கு உத்தரவிட்டார்.

இதுகுறித்து, செய்தியாளர் களிடம் மாவட்ட ஆட்சியர் குமார வேல் பாண்டியன் கூறும்போது, ‘‘வேலூர் மாவட்டத்தில் 4 உழவர் சந்தைகள் உள்ளன. இதன் பயன்பாடு உழவர்களுக்கு சரியான வசதிகள் உள்ளதா? என்றும் காய்கறிகள் வாங்க வரும் பொதுமக்களுக்கான வசதிகள் குறித்தும் இந்த உழவர் சந்தையில் ஆய்வு நடத்தப்பட்டது.

விவசாயிகள் பேருந்து வசதி மட்டும் கேட்டுள்ளனர். அதுகுறித்து ஆய்வு செய்து விரைவில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்த உழவர் சந்தையில் வாகனம் நிறுத்துமிடம் விரிவுபடுத்துவது குறித்து ஆலோசிக்கப்படும். இரு சக்கர வாகனங்கள் திருடுபோவது குறித்து காவல் துறை மற்றும் வேளாண் அதிகாரிகளின் பாது காப்பு வழங்க நடவடிக்கை எடுக் கப்படும்’’ என்றார்.

இதனைத் தொடர்ந்து, காட்பாடியில் உள்ள உழவர் சந்தையில் உள்ள 73 கடைகளை பார்வையிட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், அங்குள்ள விவசாயிகளிடமும் கலந்துரை யாடினார்.

இந்த ஆய்வின்போது, வேலூர் மாநகராட்சி ஆணையர் சங்கரன், வேளாண் அலுவலர் டேவிட் ராஜ்குமார், தோட்டக்கலை உதவி இயக்குநர் நித்யா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in