

வெளிநாடுகளில் உள்ள மருத் துவக் கல்லூரிகளில் பட்டம் பெற்றவர்களுக்காக மெடிக்கல் கவுன்சில் ஆப் இந்தியா நடத்தும் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளை லிம்ரா ஓவர்சீஸ் எஜுகேஷன் நிறுவனம் சென்னையில் நடத்தி வருகிறது. இதற்காக இந்த துறையில் 15 ஆண்டுகளுக்கு மேல் அனுபவமிக்க எம்.சி.ஐ. பயிற்சி மையம், டெல்லி ஏ.எஃப்.எம்.ஜி. நிறுவனம் ஆகியவற்றுடன் கூட்டு சேர்ந்துள்ளது.
இது குறித்து இந்நிறுவனத் தின் இயக்குநர் முகமது கனி கூறியதாவது:
இந்தியாவில் மருத்துவம் படிக்க அதிக இடங்கள் இல் லாததாலும், வெளிநாடுகளில் கல்லூரிக் கட்டணம் குறை வாக இருப்பதாலும், வெளி நாட்டு மருத்துவ பல்கலைக் கழகங்களில் சேர்ந்து படிப் பவர்களின் எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது.
வெளிநாட்டு மருத்துவ பல்கலைக்கழகங்களில் மருத் துவ பட்டம் பெற்றவர்கள், இந்தியாவில் மருத்துவராக பணி செய்ய, மெடிக்கல் கவுன்சில் ஆப் இந்தியா ஆண்டுதோறும் இரு முறை நடத்தும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
இந்த தேர்வில் எளிதாக வெற்றி பெற லிம்ரா நிறுவனமும், டெல்லி ஏ.எஃப்.எம்.ஜி.யும் இணைந்து, எம்.சி.ஐ.யின் எஃப்.எம்.ஜி. புதிய பாடத் திட்டத்தின் அடிப்படையில், குறுகிய கால (5 மாதம்) பயிற்சி வகுப்புகளை நடத்துகிறது. இந்த வகுப்புகள் மருத்துவப் பிரிவுகளில் மிகுந்த ஆற்றலும் அனுபவமும் உள்ள மருத்துவப் பேராசிரியர்களால் நடத்தப்படுகிறது.
மேலும் மாணவர்கள் தங்கும் வசதிக்கு ஏற்பாடு செய்து தருவதுடன், அவர்களின் தகுதித் திறனை சோதித்து மேம்படுத்த வாரம் தோறும் தேர்வுகளை நடத்தி ஆலோசனையும் வழங்குகிறது.
சென்னையில் இந்த பயிற்சி வகுப்புகள் பிப்ரவரி 13 அன்று தொடங்க உள்ளன. அயல் நாடுகளில் மருத்துவம் படித்து முடித்த தமிழக மாணவர்கள் இதில் சேரலாம்.
மேலும் விவரங்களுக்கு, லிம்ரா ஓவர்சீஸ் எஜுகேஷன், 177, ராயப்பேட்டை நெடுஞ்சாலை, எஸ்.எம்.எஸ்.சென்டர், முதல் தளம், மயிலாப்பூர், சென்னை-4 என்ற முகவரியிலோ, 9444276829, 9444615363 ஆகிய தொலைபேசி எண்களிலோ தொடர்புகொள்ளலாம்.