திருக்குறளைத் தேசிய நூலாக அறிவிக்கக்கோரி புதுவை தமிழ்ச் சங்கம் புதுமைப் போராட்டம்

திருக்குறளைத் தேசிய நூலாக அறிவிக்கக்கோரி புதுவை தமிழ்ச் சங்கம் புதுமைப் போராட்டம்
Updated on
1 min read

திருக்குறளைத் தேசிய நூலாக அறிவிக்கக்கோரி 24 மணி நேரம் இடைவிடாது திருக்குறள் ஒப்புவிக்கும் நிகழ்வு புதுச்சேரியில் தமிழ்ச்சங்கத்தில் துவங்கியது.

புதுச்சேரி தமிழ்ச்சங்கத்தினர் புதிய முன் நிகழ்வை இன்று எடுத்துள்ளனர். புதுச்சேரியிலுள்ள தமிழ்ச்சங்கத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு திருக்குறள் ஒப்புவிக்கும் நிகழ்வை தொடங்கினர். திருக்குறளைக் கூறி பாஜக எம்எல்ஏ ஜான்குமார் துவக்கி வைத்தார்.

புதுச்சேரி தமிழ்ச்சங்கத்தின் தலைவர் முத்து கூறுகையில், "திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தொடர்ந்து 24 மணி நேரம் இடைவிடாது திருக்குறளை ஒப்புவிக்கும் முயற்சியை துவக்கியுள்ளோம். இந்நிகழ்வில் அறிஞர்கள், எழுத்தாளர்கள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், தன்னார்வலர்கள், தமிழ் அமைப்பினர், பொதுமக்கள் ஆகியோர் பங்கேற்கின்றனர்" என்று குறிப்பிட்டார்.

சங்கத்தின் செயலர் சீனு மோகன்தாசு கூறுகையில், திருக்குறளை தேசிய நூலாக்கி வள்ளுவர் புகழை உயர்த்தவே இந்நிகழ்வு நடக்கிறது. கரோனா விதிகளை பின்பற்றி இம்முயற்சியில் ஈடுபட்டுள்ளோம் என்று தெரிவித்தார். தொடர்ந்து 24 மணி நேரம் திருக்குறளை ஒப்புவித்து நாளை தமிழ்மாமணி பட்டாபிராமன் இந்நிகழ்வினை நிறைவு செய்ய உள்ளார். பலரும் வரிசையாக திருக்குறளை ஒப்புவித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in